கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர் அதிமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் பலத்தை நிரூபிக்க ஆளுங்கட்சியான திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில் திமுகவில் இருந்து கவுன்சிலர், அதிமுகவுக்கு தாவியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை அறிவித்ததுமே, திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை 2 கட்டங்களாக 150 அதிமுக வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், ஆளும் கட்சியான திமுகவின் கவுன்சிலர் ஒருவர் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். கோவை மாநகராட்சி 77 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் நேற்று இரவு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். நேற்று தனது குடும்பத்துடன் சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராஜலட்சுமி.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஏற்பாட்டில் ராஜலட்சுமி, அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுக மிகவும் வலுவாக உள்ளதாகச் சொல்லப்படும் கோவை மாவட்டத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதற்காக செந்தில் பாலாஜியை களமிறக்கி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆளும் கட்சி கவுன்சிலர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்திருப்பது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, திமுகவின் கோட்டையாக மாறி வருகிறது என அக்கட்சியினர் கூறி வரும் சமயத்தில் நடந்துள்ள இந்த கட்சி தாவல் திமுகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வரும் ராஜலட்சுமி, கட்சி தன்னை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். "இத்தனை ஆண்டுகளாகக் களத்தில் பணியாற்றி இறுதியாக வார்டு கவுன்சிலர் ஆகியிருந்த போதிலும், வரவிருக்கும் தேர்தல்களுக்கு எனக்கு எந்த பூத் அளவிலான பணிகளும் ஒதுக்கப்படவில்லை" என்று ராஜலட்சுமி கூறியுள்ளார்.
மேலும், "கட்சிக்குள் கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை, பொதுப் பணிகளுக்கும் சுதந்திரம் இல்லை. கட்சிப் பிரதிநிதிகள் எங்களை மீறிச் செயல்படுகிறார்கள். கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு தனிநபருக்கும் மரியாதை அளிப்பதில் அதிமுக மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும் சில திமுக கவுன்சிலர்கள் கட்சி மாறுவது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
-
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி












Click it and Unblock the Notifications