‛‛6 இடங்கள்’’.. சொந்த ஊர் செல்ல சென்னையில் எங்கிருந்து பஸ்கள் ஏற வேண்டும் தெரியுமா? முழு விபரம்
சென்னை: சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் முனையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல மக்கள் எங்கிருந்து பஸ்கள் ஏற வேண்டும் என்பது பற்றி அமைச்சர் சிவசங்கர் விளக்கி உள்ளார்.
இந்நிலையில் தான் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களை இன்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். இந்த வேளையில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல எங்கிருந்து பஸ்கள் ஏற வேண்டும் என்பது பற்றி விளக்கினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

‛‛பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல முதல்வர் ஸ்டாலின் வழிக்காட்டுதலின்படி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக சென்னையில் இருந்து இயங்கும் 2 ஆயிரம் பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. பெங்களூர் செல்லும் பஸ்கள் மற்றும் இசிஆர் வழியாக செல்லும் அரசு விரைவு பேருந்துகள் தவிர பிற எஸ்இடிசி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
மேலும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திட்டக்குடி, நெய்வேலி, ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இசிஆர் வழியாக செல்லும் பஸ்கள் கேகே நகர் மாநகர பஸ் நிலையத்தில் இருந்தும், தாம்பரம் மெப்ஸில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. குரும்குளம் மேல்நிலை பள்ளியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பூந்தமல்லியில் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றனர்.
எஸ்இடிசி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்பட்டு செல்கின்றனர். பிற இடங்களில் இருந்து தென்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வந்து செல்லும். கிளாம்பாக்கம் முனையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகைகளுக்கு பஸ்களில் முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை 1.24 லட்சமாக இருந்தது. ஆனால் இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது வரை 1.32 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட சுமார் 8 ஆயிரம் பேர் அதிகமாகும்'' என்றார்.
-
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications