சென்னை மக்களுக்கு ஷாக்.. ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்வு.. முழு லிஸ்ட்
சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு தொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஜனவரி 15 (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) மாட்டுப் பொங்கல் - திருவள்ளுவர் தினமும், ஜனவரி 17 (சனிக்கிழமை) காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறையாகும்.

அதன்பிறகு ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில் தான் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர்.
ஜனவரி 15ம் தேதிக்கு முன்பாக ஜனவரி 14ம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று அரசு விடுமுறை இல்லாவிட்டாலும் கூட பலரும் 13ம் தேதியே சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். இதையொட்டி இதையொட்டி தமிழகத்தில் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் தற்போது தமிழகத்தில் அம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
* சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.1,400 முதல் ரூ.18,00 என்ற அளவில் இருக்கும். தற்போது டிக்கெட் கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.4,200 ஆக உள்ளது. அதேபோல் நாகர்கோவிலுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.850 முதல் ரூ.900 வரை இருக்கும். தற்போது ரூ.2 ஆயிரம் முதல்
* சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு வழக்கமான நாட்களில் ரூ.900 ரூபாய் முதல் ரூ.1,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது ரூ.4200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,100 ரூபாய் வரை வசூலிக்கப்படும் கட்டணம் இப்போது ரூ.3,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.800 முதல் ரூ.1,200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் கட்டம் இப்போது ரூ.3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு வழக்கமான நாட்களில் ரூ.600 ரூபாய் முதல் ரூ.900 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது அதிகபட்சமாக ரூ.3,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் இப்படி திடீரென அதிகரிப்பது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டியும் டிக்கெட் கட்டணம் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் குடும்பத்துடன் சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட முடிவு செய்துள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்னளர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications