தேர்தல் வருது.. சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.. தமிழ்நாடு முழுக்க தூக்கி அடிக்கப்படும் அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

நேற்று சென்னையில் பணியாற்றும் 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் நடந்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம்தான்.. தேர்தல் நெருங்குவதால் இன்னும் பல அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர். முக்கியமாக டாப் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தயாரித்து வருகிறாராம்.

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகார ரீதியாக முதல்வர் ஸ்டாலின் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக ஆளும் தரப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான டீசர்தான் இந்த இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் என்கிறார்கள். தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு.. தமிழ்நாடு முழுக்க சில மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், பல துறை செயலாளர்கள் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Ahead of Tamil Nadu elections CM Stalin to make huge changes and transfers in IAS IPS postings

திமுக ரெடி:

2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது

முக்கியமாக சட்டமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்துவதற்காக இரு தொகுதிகளுக்கு ஒரு மா.செ. எனும் திட்டத்தை அமல்படுத்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இதற்கு சீனியர் மா.செ.க்கள் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை.

அதேபோல, கட்சியின் ஒன்றிய அமைப்புகளையும் உடைத்து திமுக ஒன்றியங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவும் திட்டமிடப்பட்டது. இதற்கும் மா.செ.க்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. அதனால், திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்திக்கிறதாம் அறிவாலயம்.

இந்த நிலையில், தமிழகத்தை 7 மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு செயலாளரை (ம.செ.) நியமிக்க முடிவு செய்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். சென்னை மற்றும் அதன் புற நகர் மாவட்டங்களுக்கு ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளாராம். இந்த மண்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது என்கின்றனர் உடன்பிறப்புகள்.

உதயநிதி பிளான்

திமுகவின் மா.செ.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதில் இளைஞர் அணி நிர்வாகிகளை நியமிக்க உதயநிதி முயற்சித்து வருகிறார். குறிப்பாக 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்பது உதயநிதியின் திட்டம். இதற்கான முயற்சியைத்தான் கடந்த பல மாதங்களாகவே எடுத்து வருகிறார்.

ஆனால், சீனியர் அமைச்சர்களின் அதிருப்தியாலும் எதிர்ப்பாலும் இந்த முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. திமுகவிலும் மண்டலத் தலைவர் என்கிற கான்செப்ட்டை கொண்டுவரலாமா? என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. மண்டல தலைவரா? மண்டல செயலாளரா? அல்லது மு.க. அழகிரிக்கு கொடுக்கப்பட்டது போல தென்மண்டல் அமைப்பு செயலாளர் மாதிரி மண்டல அமைப்புச் செயலாளரா? என எதனை உருவாக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் 2 தொகுதிக்கு ஒரு மா.செ. எனும் திட்டத்தை எதிர்க்கும் சீனியர்களை மண்டலத்துக்கு தலைமை ஏற்கும் வகையில் நியமித்து அவர்களின் அதிருப்தியை சரிகட்டிவிட முடியும் என்று தலைமை யோசித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+