Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைக்குறாங்க எல்லாம்.. ஏர் இந்தியா ஃபிளைட்டில் இதுதான் நடந்திருக்கும்.. புட்டு புட்டு வைத்த பொன்ராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்தது என்பதை இனிதான் கண்டுபிடிப்பார்கள்.. கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் அதில் பதிவானவைகளை வைத்து, எந்தெந்த சிஸ்டம் வேலை செய்தது? எந்தெந்த இயந்திரங்கள் கோளாறு நடந்தது? எதனால் டிரஸ்ட் கிடைக்கவில்லை? எதனால் டிராக் நடந்தது? த்ரஸ்ட் செட்டிங் பிரச்சனையா? பைலட் கணிப்பு தவறா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்" என்று பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் பொன்ராஜ்.. இவர் 2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பேட்டியில், "துரதிருஷ்டவசமான சம்பவம்.. இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்.. விமான விபத்து என்பதே அரிதிலும் அரிதானது..

இந்த விபத்துக்குள்ளான விமானம் அட்வான்ஸ் தொழில்நுட்பம் நிறைந்ததாகும்.. ஆட்டோமெடிக் சிஸ்டம் முதல் பல்வேறு அதிநவீன விஷயங்களை கொண்டது.. இந்த விமானம் கிளம்பிய 3 நிமிடத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்தது, மேலே எழமுடியாமல், கீழே விழுந்துவிட்டது.

மேடே மேடே

மேடே மேடே என்று பைலட் அறிவித்தால், இதுதான் கடைசி, தப்பிக்க வழியில்லை என்று அர்த்தம். பைலட் இந்த வார்த்தையை சொல்லக்கூடிய நிலைமை வெறும் 3 நிமிடத்தில் ஏற்பட்டுள்ளது.. வெறும் 625 அடி உயரத்திலேயே இந்த மேடே நிலைமை வந்துவிட்டது.. அதற்கு மேல் 200 அடி உயரத்துக்கு சென்றுள்ளது.. பிறகு மெதுவாக இறங்கி கீழே விழுந்துவிட்டது.

எதனால் இந்த விபத்து நடந்துள்ளது இதுவரை உறுதியாக தெரியவில்லை? நான் பாதுகாப்புத் துறையில் விஞ்ஞானியாக இருந்தேன்.. போர் விமானங்களை தயாரிப்பதுதான் எங்களது பணியாகும்..

என்னுடைய அனுபவத்தில் இதை சொன்னால், விமானங்களில் 3 விஷயத்தை முக்கியமானதாக பார்க்கிறேன். ஃபிளாப், டிரஸ்ட், டிரிம், (Trust Flop Trim) என்ற மூன்று விஷயங்களும்தான், ஒரு விமானம் ஏறும்போதும், இறங்கும்போதும் முக்கியமானவை..

டிரஸ்ட் என்றால் என்ன


டிரஸ்ட் என்பது விமானத்தை முன்னோக்கி செலுத்த உதவக்கூடியது, எஞ்சினிலிருந்து.. உருவாக்கப்படுகிறது. (விமானத்தின் வேகத்தை அதிகரிக்கவும், பறக்கும்போது நிலையான உயரத்தை பராமரிக்கவும் உதவுகிறது)


ஃபிளாப் என்பது, விமானத்தின் இறக்கையின் பின் விளிம்பில் இருக்கும் ஒரு சாதனம் ஆகும். இறங்கும்போது விமானத்தை லிஃப்ட் (lift) செய்யும். ஏறும்போது டிராக் (drag) ஆகியவற்றை கட்டுப்படுத்த பயன்படுகிறது. எனவே ஃபிளாக் என்பது விமானத்தில் முக்கியமான கருவியாகும்.


டெயில் & விங்கில் ஒரு ரேடார் இருக்கும்.. அது எந்த பக்கம் திரும்புகிறதோ, அதற்கு எதிர்புறத்தில் விமானம் திரும்பும். அதற்கு கீழே சிறிதாக இறக்கை இருக்கும்.. அதில் எலிவேட்டர் இருக்கும்.. இது விமானத்தை மேலே ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் (Tail up & down) செய்ய உதவுகிறது..


ஒன்றோடொன்று தொடர்பு

இது எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு வேலை செய்யக்கூடியது.. த்ரஸ்ட்டை மேனேஜ் செய்வதற்கு FADEC என்று எனப்படும் Full Authority Digital Engine இருக்கும். ஒரு விமானத்தின் எடையானது, அதற்கேற்ற த்ரஸ்ட் இருந்தால்தான், மேலே எழும்ப முடியும்..

விமானங்கள் ஓடுதளத்தில் சென்றால், V1 speed என்பார்கள்.. பிறகு மேலேழும்பினால், அதற்கு VR Speed என்பார்கள்.. அதற்கு மேல் உயரத்தில் சென்றால், V2 speed என்பார்கள்,. இந்த மூன்றையுமே முடிவு செய்வதுதான், ஃபிளாப், டிரிம், டிரஸ்ட், ஸ்பீடு,லிப்ட் இவை எல்லாமேதான்..

ஆனால், நேற்றைய விமானத்தில், மேலே எழும்பக்கூடிய விமானம், உயரே செல்ல முடியாமல், கீழே இறங்கிவிட்டது என்றால் என்ன அர்த்தம்? இத்தனைக்கும் என்ஜின் வேலை செய்து கொண்டுதான் இருந்தது. அப்படியானால் பிளாப் சரியான திசையில் இருந்ததா? என தெரியவில்லை.. lift கிடைக்கவில்லையா? என்றும் தெரியவில்லை.

ஆனால், இதை சரிசெய்யவும் ஆட்டோமெடிக் சிஸ்டம் உள்ளது.. அது சரியாக இயங்கியதா? என்பதும் அறிய வேண்டியிருக்கிறது.. 5 டிகிரி முதல் 15 டிகிரி முதல் லிப்ட் ஆக வேண்டும். இது முதல் சிக்கலாகும்.

இரண்டாவது சிக்கல்

அதேபோல, விமானத்தின் எடை அளவுக்கு த்ரஸ்ட் குறைந்திருந்தாலும், தேவையான வேகத்தை அதிகரிக்க முடியாது. பயணிகளின் எடை, எரிவாயு எடை, பயணிகளின் லக்கேஜ்களின் எடை,

இதெல்லாம் சேர்ந்து, விமானத்தின் எடை சமமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அது பறக்க முடியாது. சமநிலை இல்லாத விமானம் பறக்க முடியாது.

மூன்றாவது சிக்கல்

மூன்றாவதாக, FADEC என்று எனப்படும் Full Authority Digital Engine அதிக உற்பத்தியிருந்தால், த்ரஸ்ட் செயல்பட முடியாது.. உடனே 2 என்ஜினியும் நின்றுவிடும்.. இனிமேல் என்ஜின் ஓடாது என்று இந்த சூழ்நிலையில்தான் பைலட் உணர்ந்துதான், மேடே என்று சொல்லியிருக்கலாம்.எனவே இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை இனிதான் கண்டுபிடிப்பார்கள்..

கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் அதில் பதிவானவைகளை வைத்து, எந்தெந்த சிஸ்டம் வேலை செய்தது? எந்தெந்த இயந்திரங்கள் கோளாறு நடந்தது?எதனால் டிரஸ்ட கிடைக்கவில்லை? எதனால் டிராக் நடந்தது? த்ரஸ்ட் செட்டிங் பிரச்சனையா? பைலட் கணிப்பு தவறா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+