நான் என்ன பண்ணினாலும் ஏதாவது சொல்லுவாங்க! இயலாதவன் கையில் எடுக்கும் ஆயுதம்.. சிவகார்த்திகேயன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நிகழ்ச்சியில் பேசிய வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதில் அவர் ரசிகர்களிடம் பேசிய ஒரு விஷயம் இப்போது கவனம் பெற்றிருக்கிறது. நம்மை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே நேரத்தை வீணாக்காமல், நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்துகொண்டே போக வேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயன் சொன்ன அறிவுரை.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் பேச்சு

இந்த சந்திப்பில் ரசிகர்கள் எப்படி செயல்பட வேண்டும், அவர்களைச் சுற்றி வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் பேசியதாவது,
நான் என்ன பண்ணினாலும் ஏதாவது சொல்லுவாங்க. அதை நீங்களே பார்த்து இருப்பீங்க. நீங்க ஏதாவது பண்ணினாலும் அதையும் ஏதாவது சொல்லுவாங்க. அதை நீங்க கண்டுக்காதீங்க.

நாம நம்மளால் முடிந்ததை செய்துவிட்டு போயிட்டே இருப்போம். நாம நல்ல எண்ணத்துல வேற எந்த மாதிரியான தப்பான யோசனைகளையும் யோசிக்க வேண்டாம். நமக்கு ஒன்னு பண்ணிட்டானா, அவனுக்கு ஏதாவது பதில் கொடுக்கணும் என்று யோசித்து நம்ம நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம். நம்மள இந்த இடத்தில் வைத்திருக்கிற மக்களுக்கு ஏதாவது திருப்பிக் கொடுக்கணும் என்று யோசித்து அதை மட்டும் பார்ப்போம். தேவையில்லாம விமர்சனம் பண்றவங்க பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.

புன்னகை பதில்

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மைண்ட்ல வச்சுக்கோங்க. இயலாதவன் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் விமர்சனம். இயன்றவன் அதை தடுக்க எடுக்கும் ஆயுதம் புன்னகை. சிரிச்சிட்டு போயிட்டே இருப்போம்.
நாம ஒரு ஆறு மாதிரி இருக்கணும். நமக்கான பாதையை நாம தேர்ந்தெடுத்து போகிற வழியில் எத்தனை பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்கிறோமோ, முடிந்த வரைக்கும் இருப்போம் என்று சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இப்படி மூச்சு பிடிச்சு பேசி இருந்தாலும் இதை வைத்து உங்கள் கலாய்த்து வருகிறார்கள். இவரும் விஜய் தனுஷ் வரிசையில் அரசியலுக்கு வருவதற்கு அடித்தளம் போட்டுவிட்டார், மக்களுக்கு நல்லது பண்ண போகிறோம் என்று சொல்லும்போதே நாங்க புரிஞ்சுகிட்டோம் என்று கமெண்ட் கொடுக்கிறார்கள்.

ரசிகர்கள் கருத்து

சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றம் சமீப காலமாக பெரிய அளவில் கவனம் பெறுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகளை அழைத்து அவர் சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பில் நற்பணி குறித்து மட்டுமல்லாமல், ரசிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் அவர் பேசி வருகிறார். அதனால் இந்தப் பேச்சையும் அந்தச் சூழலில்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒரு நடிகருக்கு ரசிகர்கள் அதிகமாகும்போது பாராட்டுகள் மட்டும் வராது. அதே அளவுக்கு விமர்சனங்களும் வரும். நடிகரை விமர்சிப்பது, ரசிகர்களை விமர்சிப்பது, ரசிகர்கள் செய்யும் விஷயங்களை வைத்து நடிகரை விமர்சிப்பது என்று சமூக வலைதளங்களில் தினமும் ஏதாவது ஒரு விவாதம் நடந்துகொண்டேதான் இருக்கும். அந்த இடத்தில் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டால், செய்ய வேண்டிய வேலை அப்படியே பின்னால் போய்விடும். அதைத்தான் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கும் புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+