கடைசி 32 நொடியில் பைலட் பேசியது என்ன? என்ஜின் ஸ்விட்ச் அணைந்ததா? ஏர் இந்தியா ஃபிளைட் குறித்து பரபர
சென்னை: அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உடல் கருகி இறந்துவிட்டனர்.. தற்போது, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆப் ஆகிவிட்டது விபத்து ஏற்பட காரணமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும், கட்டிடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் என்றும் அந்த அறிக்கையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி அமகதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் போயிங் விமானம் 787-8 ட்ரீம்லைனர், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே, தொடர்ந்து மேலே பறக்க முடியாமல் விபத்துக்குள்ளானது. இதனால், அருகிலிருந்த மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டல் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்ததில், 274 பேர் பலியாகினர்.

நிவாரணம்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணத்தை டாடா குழுமம் அறிவித்திருந்தது.. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு DNA பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் உறவினர்களிடம் சடலங்களும் ஒப்படைக்கப்ட்டன..
இந்த விபத்து குறித்து மத்திய அரசின் உயர்மட்ட குழு விசாரணையை துவங்கினார்கள்.. இந்த விமான விபத்து பல்வேறு அதிர்வலைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி வந்தது..
குறிப்பாக, விஸ்வகுமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் தப்பியது எப்படி? எமர்ஜென்சி எக்ஸிட் அருகில் 11A என்ற சீட்டில் உட்கார்ந்திருந்திருந்ததால், விமானம் விபத்துக்குள்ளாக போகிறது என்று பைலட் அறிவித்த ஒருசில நொடிகளிலேயே, சீட் பெல்ட்டை கழட்டிவிடவும், அது 2 ஆக உடைந்து, மணல் திட்டில் குதித்துவிட்டேன் விஸ்வகுமார் சொல்வது ஏற்கும்படி இல்லையே? என்று சோஷியல் மீடியாவில் சந்தேகம் கிளப்பினர்.
விஸ்வகுமார் வெளியிலிருந்த காற்று முழுவதுமே உள்ளே நுழைந்துவிட்டதால்தான் விமானம் விபத்துக்குள்ளானது என்று சிலர் சந்தேகம் கூறினார்கள்.
சந்தேகங்கள் - சலசலப்புகள்
மேலும் சிலர், விமானத்துக்கு 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளே போதுமானதாக இருக்கும்போது, எதுக்காக 1 லட்சம் வெள்ளை பெட்ரோலை நிரப்பினார்கள்? என்றும் சந்தேகம் கேட்டார்கள்..
இறக்கை 2 பக்கமும் ஏன் வேலை செய்செய்யவில்லை? கலப்பட பெட்ரோல் பயன்படுத்தியதால்தான், இறக்கை விரியவில்லையா? மனித பிழையா? இயந்திர பிழையா? என்றெல்லாம் கேள்விகள் பறந்தன..
ஆய்வுக்குள்ளான கருப்பு பெட்டி
எனினும், கருப்பு பெட்டியை முழுமையாக ஆராய்ந்தால்தான் அனைத்து உண்மையும் தெரியவரும் என்பதால், இந்த விபத்து பரபரப்பு ஓரளவு அடங்கியது..ஏர் இந்தியா நிறுவனம், டாடாவிடம் சென்றபிறகுதான் இப்படியான விபத்துகள் நடப்பதாக சலசலப்புகளும் எழுந்தாலும், இந்த விபத்துக்கு பிறகு விமானத்தில் பயணம் செய்ய பலருக்கும் ஒருவித பயமும் தொற்றிக் கொண்டுவிட்டது.
விமானம் உருக்குலைந்தது
இந்நிலையில்தான், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர், கருப்புப் பெட்டி மூலம் தகவல்களை சேகரித்து இநத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆப் ஆகிவிட்டதே விபத்துக்கு காரணம் என்றும், கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் என்றும் அந்த அறிக்கையில் பிரதான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
வெளியான அறிக்கை
அந்த அறிக்கையில், "விமானம் புறப்பட்ட சில நொடிகளில் 2 என்ஜின்களும் நடுவானில் நின்று போனதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அதற்கான காரணம் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.
இதில் விமானி ஒருவர், ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது? என்று கேட்டதற்கு, நான் கிடையாது என்று இன்னொரு விமானி பதிலாக சொல்கிறார்..
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட விமானிகள், RAT என்ற அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டுவந்திரக்கிறார்கள்.. அபபோது முதல் என்ஜினை செயலுக்கு கொண்டுவர முயன்று அதில் லேசாக வெற்றியும் கண்டுள்ளனர்.. ஆனால், 2வது என்ஜின் செயல்படவில்லை. எனவே, வெறும் 32 நொடிகள் மட்டுமே அந்த விமானம் அந்தரத்தில் பயணித்துள்ளது.
விமானிகள் தகுதியானவர்கள்
இதில், எரிபொருள் சோதனையில் கலப்படம் இல்லை என்பதும், இதனால் சதி வேலை காரணம் இல்லை என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. அதேபோல, பறவைகள் குறுக்கிட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.. காலநிலை சிக்கல்கள் ஏற்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. விமானிகள் 2 பேருமே மருத்துவ ரீதியாக உடல் தகுதியானவர்கள்தான்.. போதுமான ஓய்வுக்கு பிறகே பணிக்கு திரும்பியுள்ளனர்.
அத்துடன் அந்த வகை விமானங்களை இயக்கும் அனுபவம் பெற்றவர்கள். சதி வேலை நடந்ததற்கான உடனடி ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்றாலும், எரிபொருள் திடீரென்று துண்டிக்கப்பட்டதன் காரணம் மர்மமாக இருக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போயிங் நிறுவனம்
அதேசமயம், விமானத்தை உருவாக்கிய போயிங் நிறுவனம் மற்றும் என்ஜினை தயாரித்த ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் மீது எந்த நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்படவில்லை. கடுமையான சேதமடைந்த கருப்புப் பெட்டியை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லாமலேயே, டெல்லியிலேயே வைத்து இத்தனை தரவுகளை நம்முடைய அதிகாரிகள் சேகரித்திருக்கிறார்கள்.
முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் என்றும் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications