கொத்து கொத்தாக.. ஏர் இந்தியா ஃபிளைட்டில் என்ன நடந்திருக்கும்? கணிப்புகளை அடுக்கிய முன்னாள் விமானி
சென்னை: விமான விபத்துக்கு இதுதான் காரணம் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார் ஏவியேஷன் நிபுணர் கேப்டன் ஸ்டீவ்.. விமான விபத்துகளை ஆய்வு செய்து காரணங்களை கணிக்கும் துறையில் வல்லுநர்தான் இந்த ஸ்டீவ்.. கோ - பைலட்டின் அரை நொடி தவறே அனைத்து உயிர்களையும் பறிக்க காரணம் என்றும் கணித்து கூறியிருக்கிறாராம். யார் இவர்? விபத்து குறித்து இவர் கூறும் கணிப்பு என்ன?
4 நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்துக்கு காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை..

கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அதில் பதிவானவைகளை வைத்து, எந்தெந்த சிஸ்டம் வேலை செய்தது? எந்தெந்த இயந்திரங்களில் கோளாறு நடந்தது? என்ற விசாரணை நடந்து வருகிறது.
கருப்பு பெட்டி ஆய்வு
எனினும், விமான விபத்து எதனால் நடந்திருக்கலாம் என்ற கணிப்புகளை முன்னாள் விமானிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒருவர் 2 என்ஜின்களும் கோளாறாகியிருக்கலாம் என்கிறார், இன்னொருவர் அதிக எரிபொருள் நிரப்பியதே காரணம் என்கிறார், மற்றொருவர் தொழில் நுட்ப கோளாறு என்கிறார்.. எனினும் பெரும்பாலானோர் மனித தவறே பிரதானம் என்றும் சொல்லி வருகிறார்கள்.
இத்தனை கணிப்புகளையும், இணையத்தில் பரவிய விமான விபத்து வீடியோவை வைத்தே தெரிவித்திருக்கிறார்கள்.. இந்த 787 ட்ரீம்லைனர் விமானமானது, தாழ்வாக பறந்து விழுந்து தீப்பிழம்பு ஏற்பட்ட வீடியோ காட்சி தான், உலகம் முழவதும் வைரலாக பரவியது...
17 வயது சிறுவன்
அகமதாபாத் விமான நிலையம் அருகில் வாடகை வீட்டில் குடியிருக்கும் 17 வயது சிறுவன் ஆர்யன் என்பவர்தான், விமானம் வீட்டுக்கு அருகிலேயே பறந்து செல்வதை யதேச்சையாக படம் பிடித்திருக்கிறார். இந்த வீடியோவை வைத்து, அமெரிக்க கடற்படை முன்னாள் பைலட் மற்றும் விமான நிபுணர் கேப்டன் ஸ்டீவ் ஷைப்னர் (US Captain Steve Scheibner) என்பவரும், தன்னுடைய அனுபவத்தை வைத்து, சில காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்டீவ் சொல்லும் 4 காரணங்கள்
அந்தவகையில் 4 காரணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.. அதாவது, மின்சக்தி இழப்பு, எரிபொருள் மாசுபாடு, பறவை மோதல், அல்லது ஃபிளாப் கட்டமைப்பு பிழை போன்றவைகளை காரணமாக கணித்துள்ளார்.. நேரடியாக இயந்திர கோளாறு அல்லது மேலெழும்பும் திறன் இழப்பு காரணமாக இருக்கலாம் என்பது ஸ்டீவ் வெளிப்படுத்தும் காரணமாகும்.
பறவை எதுவும் மோதவில்லை.. அப்படி மோதினால் ஒருபுறம் என்ஜின் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும்.. மிச்சமுள்ள ஒரு என்ஜினை வைத்து பத்திரமாக தரையிறக்கியிருக்கலாம். ஆனால், வீடியோவை பார்த்தால், பறவைகள் கூட்டமாக வரவில்லை என்றே தெரிகிறது.
பவர் லாஸ் பிரச்சனையா
விமானம் பவர் லாஸ் பிரச்சனை என்றால், விமானம் கிளம்பும்போதே சிக்கல் வந்திருக்கும்.. விமானத்தின் என்ஜினிலிருந்து புகையோ, தீயோ, தீப்பொறியோ வந்திருக்கும்.. அப்படி எதுவுமே அந்த வீடியோவில் தென்படவில்லை.எனவே பவர் லாஸ் ஆகியிருக்காது..
எரிபொருள் மாசுபடிந்து வெடிக்கவும் வாய்ப்பில்லை.. என்ஜின் சிதறல் என்று இண்டிகேட்டரில் முன்கூட்டியே காட்டித்தந்துவிடும்.. அப்படியும் எதுவும் தெரியவில்லை.. மொத்தத்தில் விமான என்ஜின்கள் அதன் சக்தியை இழக்கவில்லை. கியர் அப் என்று பைலட் உச்சரித்ததுமே, லேண்டிங் கியரை மேலெழுப்பும்.. உடனே சக்கரங்களும் உள்ளிழுத்து கொள்ளும்.. அப்போது 12 டிகிரி கோணத்தில் விமானம் பறக்கும்.
இறக்கைகள் மேலெழும்பவில்லை
பிளாப்ஸ் முன்கூட்டியே பின்வாங்கப்பட்டுள்ளது.. எனவேதான் இறக்கைகளை மேலே எழும்ப முடியவில்லை.. பவர் முழுவேகத்தில் புஷ்-அப் ஆகவில்லை.. இதனால் விமானத்தின் எடை கூடியிருக்கிறது.. லேண்டிங் கியர் அதிக எடையுடன் கீழே தொங்கி இழுத்துள்ளது..
பிளாப்ஸ் மேலெழும்ப முடியவில்லை... பிளாப்ஸ் மேலெழும்பியிருந்தால், மூக்குப்பகுதி சீரான கோணத்தில் வந்திருக்கும். ஆனால், அதிக காற்று , உயரம், கோணம் மாறுபடுதல் போன்ற இந்த சூழலை சமாளிப்பது பைலட்டுகளுக்கு சிரமம்..
ஒரே ஒரு வீடியோ
அவசர மின்சக்தி ஆதாரமான ரேம் ஏர் டர்பைன் (RAT) இயக்கப்பட்டிருப்பதால், மின்சார அல்லது ஹைட்ராலிக் அவசர நிலை ஏற்பட்டிருக்கலாம்.. இதனால் பைலட்டும் மூக்கை மேலே தூக்க முயன்றிருக்கலாம், விமானம் தரையில் விழுந்துள்ளது. எனவே, ஃபிளாப் கட்டமைப்பில் கோளாறு இருந்திருக்கலாம்.. இவ்வளவு கணிப்பையும், சோஷியல் மீடியாவில் பரவிய அந்த ஒரே ஒரு வீடியோவை, பலமுறை உற்று கவனித்து இந்த கணிப்பை ஸ்டீவ் வெளிப்படுத்தியிருக்கிறார்..
எனினும், இந்திய சிவில் விமானப் பொதி நிர்வாகி (DGCA) மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் விசாரணைக் குழுக்கள் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றன.. மற்றொருபுறம் கருப்பு பெட்டியிலிருந்தும் விசாரணை நடந்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications