பாஜகவிடம் சரண்டரான அதிமுக.. பொதுக்கூட்ட முகப்பில் இருந்த பெரியார் புகைப்படம் அகற்றம்.. என்ன நடந்தது?
மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்ட அரங்கின் முகப்பில் இருந்த பெரியார் புகைப்படத்தை பாஜகவின் உத்தரவின் பெயரில் அதிமுக அகற்றி இருக்கிறது. இதன் காரணமாக பாஜகவிடம் அதிமுக சரண்டராகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மதுரையில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மண்டேலா நகர்ப் பகுதியில் நடக்கவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட என்டிஏ கூட்டணியின் அத்தனை தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் கோயிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்த உள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்திற்காக ஏராளமான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே அந்தப் பகுதி முழுவதும் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் நட்டு வைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பொதுக்கூட்ட அரங்கின் முகப்பில் அதிமுக, பாஜக தலைவர்களின் பேனர்கள், புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதன்படி பிரதமர் மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பேனர்கள் மிகப்பெரிதாக வைக்கப்பட்டன. அதேபோல் முகப்பின் உச்சியில் அண்ணா மற்றும் பெரியாரின் புகைப்படங்கள் இடம்பெற்றன.
ஆனால் திடீரென பாஜகவின் உத்தரவுபடி அதிமுகவினர் பெரியாரின் புகைப்படத்தை மட்டும் அகற்றியுள்ளனர். இதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவிடம் அதிமுக சரண்டராகிவிட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இதனை கடுமையாக சாடியுள்ளனர். இன்னும் சில நாட்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களை அகற்றிவிடுவார்கள் என்று விமர்சித்துள்ளார். இதற்கு அதிமுகவினர் சோசியல் மீடியாவில் கூட பதில் அளிக்கமால அமைதி காத்து வருகின்றனர்.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications