பங்குனி உத்திரம்.. வெற்றி முழக்கம்! நாளை ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர்கள்!
சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை (மார்ச் 25) ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்க்கு கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 28ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30அம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்: அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது அதிமுக. தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியிலும், எஸ்டிபிஐ நெல்லை முபாரக் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க, பாஜக கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இன்னும் 2 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது.
வேட்பு மனு தாக்கல் - நல்ல நாள்: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம். அதன்படி இந்த முறை பங்குனி உத்திர நாளில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய நாள்தான் பங்குனி உத்திரம்.
சிறப்பான இந்த நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் அதிமுக வேட்பாளர்கள். மேலும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 தொகுதி வேட்பாளர்களும் இன்று திருச்சியில் நடைபெறும் அ.தி.மு.க தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியால் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
நாளை வேட்பு மனு தாக்கல்: அதன் பிறகு நாளை 25ஆம் தேதி அ.தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். 25ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஓரே நாளில், நல்ல நேரமான பகல் 12 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது.
இதே போல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 27ஆம் தேதி மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக, பாஜக: இதே போல் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் 25 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்த நாட்களில் அதிகமாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதால் ஆட்சியர் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திமுகவில் பெரம்பலூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் அருண் நேரு உள்ளிட்ட சிலர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக வேட்பாளர்களின் முழு பட்டியல்
1 தென் சென்னை - ஜெயவர்தன்
2 வட சென்னை - ராயபுரம் மனோ
3 காஞ்சிபுரம் - ராஜசேகர்
4 அரக்கோணம் - விஜயன்
5 கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 விழுப்புரம் - பாக்கியராஜ்
7 சேலம் - விக்னேஷ்
8 நாமக்கல் - தமிழ் மணி
9 ஈரோடு - அஷோக்
10 கரூர் - தங்கவேல்
11 சிதம்பரம் - சந்திரகாசன்
12 மதுரை - சரவணன்
13 தேனி - நாராயணசாமி
14 நாகை - சுர்ஜித் சங்கர்
15 ஆரணி - கஜேந்திரன்
16 ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17 ஸ்ரீ பெரும்புதூர் - பிரேம் குமார்
18 வேலூர் - பசுபதி
19 திருவண்ணாமலை - கலியபெருமாள்
20 தருமபுரி - அசோகன்
21 பெரம்பலூர் - சந்திரமோகன்
22 கள்ளக்குறிச்சி - குமரகுரு
23 திருநெல்வேலி - ஜான்சி ராணி
24 தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
25 சிவகங்கை - சேவியர் தாஸ்
26 திருப்பூர் - அருணாசலம்
27 கோயம்புத்தூர் - சிங்கை ராமச்சந்திரன்
28 நீலகிரி - லோகேஷ்
29 மயிலாடுதுறை - பாபு
30 பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி
31 திருச்சி - கருப்பையா
32 கன்னியாகுமரி - பசிலியான் நசரேத்
33 புதுச்சேரி - தமிழ்வேந்தன்
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பட்டியல்
புதிய தமிழகம் - தென்காசி - கிருஷ்ணசாமி
எஸ்டிபிஐ - திண்டுக்கல் - நெல்லை முபாரக்
தேமுதிக
திருவள்ளூர் (தனி) - நல்லதம்பி
மத்திய சென்னை - பார்த்தசாரதி
கடலூர் - சிவக்கொழுந்து
விருதுநகர் விஜய பிரபாகரன்
தஞ்சாவூர் - சிவநேசன்
-
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்











Click it and Unblock the Notifications