பாஜக- அதிமுக கூட்டணி.. எதிர்ப்பா? அரவணைப்பா? அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்ட அண்ணாமலை!
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெற இருக்கிறது. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழு சந்தித்து பேசியதைத் தொடர்ந்து பாஜக கூட்டணிக்கு அந்த கட்சி திரும்ப இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு வந்தால் தமது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என முன்னர் அறிவித்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் திமுக தலைமையில் வலிமையான கூட்டணி நீடிக்கிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைத்தும் தனித்தனியாக சிதறி நிற்கின்றன. இது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையக் கூடியது; எந்த ஒரு கூட்டணியும் நிரந்தரமாக இருப்பது இல்லை என்று மட்டும் தெரிவித்தார்; அதிமுக- பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைவர்களும், பாஜக உடனான கூட்டணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் அதிமுக மீண்டும் கூட்டணிக்கு வருவது பற்றி தமிழக பாஜக தலைவர்கள் கனத்த மவுனம் காக்கின்றனர். தமிழக சட்டசபையில் நேற்று திமுக- அதிமுக இடையே இது தொடர்பாக விவாதம் நடந்த போதும் கூட, பாஜக மவுனமாக இருந்தது.
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைதான், அதிமுகவை மிக கடுமையாக விமர்சித்தவர்; பாஜக கூட்டணிக்கு அதிமுக திரும்பினால், தமிழக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் ஏற்கனவே அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா? அல்லது மேலிடக் கட்டளையை ஏற்று அதிமுகவை அரவணைப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications