வரம் கொடுத்த எடப்பாடி.. தலையில் கை வைக்கும் டிடிவி! அதிமுக உண்டான புதுப் புயல்! உடையுது கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அமமுக கூட்டணி வலுவாகவே இருக்கிறது என டிடிவி தினகரன் அவ்வப்போது சொல்லி வந்தாலும், மறைமுகமாக சில உள்ளடி வேலைகளை பார்த்து வருகிறாராம். சசிகலாவும் தானும் மீண்டும் கட்சிக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக சில தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தினகரன் பேசியது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக அமமுக கூட்டணி உடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி, கட்சி பிளவு, பின்னர் நடந்த சமரசம் ஆகியவை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்தவர்கள் கட்சிக்குள் இணைந்திருந்தாலும், அதிருப்தி இன்னும் நீடிப்பதாக கூறப்படுகிறது.

AIADMK

இதற்கிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பாக தகவல்கள் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளன. என்டிஏ மீண்டும் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ள தினகரன், தற்போது மிகப்பெரிய டார்கெட்டை நெருங்கியுளார்.

எடப்பாடி பழனிசாமி

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்தது. அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சிக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். சிலர் அமைதியாக காத்திருக்கின்றனர்.

விஜயபாஸ்கர் & கோ

இந்த சூழலில் அதிமுகவை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்பு, அமைப்பு ரீதியான மாற்றங்கள் போன்றவற்றில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதுபுறம் இருக்க கரூர், புதுக்கோட்டையில் பலமாக இருந்த விஜயபாஸ்கர் & கோ. தென் மாவட்டங்களில் வலுவாக இருந்த சில முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவி விட்டனர்.

டிடிவி தினகரன்

ஏற்கனவே டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என பல முன்னாள் தலைவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிவி சண்முகம் வேலுமணி தலைமையில் ஒரு கோஷ்டி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், சசிகலா அதிமுகவிற்கு வரலாம் என சொல்லப்படுகிறது. அதற்காக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருக்கிறது.

சசிகலா

இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் சசிகலாவை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தன் பங்குக்கு அதிமுகவை உடைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறார் டிடிவி தினகரன், என்ற தகவல் தென் மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.அதிமுகவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் அல்லது அங்கு இருக்கும் நிர்வாகிகளை தன்னுடன் சேர்க்க வேண்டும் என்பதால் அதிருப்தி நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் பேசி வருகிறார் என்கின்றனர்.

உடையுது கூட்டணி?

இந்த தகவல்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றிருக்கிறது. ஊடகங்களை சந்திக்கும்போது அதிமுகவும் அமுமுகவும் ஒன்றுதான் என பேசினாலும் மறைமுகமாக அதிமுக நிர்வாகிகளுடன் அவர் பேசி வருவது தெரியவந்ததும் கடும் அப்செட் ஆகிவிட்டாராம். பல துரோகங்கள் பிரச்சினைகளை கடந்தும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக கூட்டணியில் இணைய அனுமதித்தேன். அதனால்தான் ஒரு எம்எல்ஏ கிடைத்தது. ஆனால் அதையும் தினகரன் தக்க வைத்துக்கொள்ளவில்லை. தற்போது வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைப்பது போல கூட்டணியில் சேர்த்த தன்னையே மாற்றப் பார்க்கிறாரா என தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம் .இதனால் அதிமுக அமமுக கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+