அதிமுக உடன் இணையும் அமமுக? டிடிவி தினகரனை இழுக்கும் எஸ்பி வேலுமணி டீம்.. சைலண்ட் மோடில் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - அமமுகவை இணைப்பதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளதாகவும், அதற்கேற்ப அதிமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, இணைச் செயலாளராக டிடிவி தினகரனும் செயல்பட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக வந்தது. அப்போது முதலே இரு கட்சிகளுக்கு இடையிலான நெருக்கம் அதிகரித்துவிட்டது. தேர்தலுக்கு பின் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தி அதிகரித்துள்ளது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட இன்னும் எதிராகவே நிற்கின்றனர்.

Edappadi Palaniswami

அவர்கள் தரப்பில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை தனித்தனியாகவும் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். மறுபக்கம் டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி பாஜக மூலமாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிடிவி தினகரன் நேரடியாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து கொள்ளட்டும். எனக்கு இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளித்து, சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது மட்டும் ஆலோசனை செய்யும் அதிகாரம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் இரட்டை தலைமை சூழல் வந்துவிடுமோ என்று அமைதி காத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். அமமுக நிர்வாகிகளுக்கு பதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் டிடிவி தினகரன் எளிதாக கட்சியை கைப்பற்றிவிடுவாரோ என்ற எண்ணமும் எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கிறது.

இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவுக்கு வருவார் என்று தெரிகிறது. அந்த தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தால், டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்து அமமுகவை அதிமுகவோடு இணைக்கும் முடிவுக்கு வந்துவிடுவார் என்று கருதுகின்றனர். இதனால் லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த இணைப்பு சாத்தியமாகலாம் என்று விவரம் அறிந்தவர்கள் முனுமுனுக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+