Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன்- பாமகவுக்கு 1 இடம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தர என்ன காரணம் தெரியுமா? - வீடியோ

    சென்னை: அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பாக தொமுச சண்முகம் மற்றும் வில்சன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    AIADMk Announces Rajyasabha Candidates

    மேலும் திமுகவின் 1 இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலர் வைகோ ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். வைகோ, சண்முகம், வில்சன் மூவரும் இன்று சட்டசபை செயலாளரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

    அதிமுக தரப்பில் யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. அதிமுகவைப் பொறுத்தவரையில் 1 இடத்தை பாமகவுக்கு கொடுத்துள்ளது. எஞ்சிய 2 இடங்களுக்கு கடும் போட்டி இருந்து வந்தது.

    AIADMk Announces Rajyasabha Candidates

    இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    இவர்களில் முகமது ஜான் முன்னாள் அமைச்சராக இருந்தவர். சந்திரசேகரன், மேட்டூர் நகர செயலராக பதவி வகித்து வருகிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+