மாவட்டத்திற்கு ஒரு தொகுதி.. அதிமுகவிடம் டீல் பேச தொடங்கிய பாஜக.. பின்னணியில் என்ன திட்டம்?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியிலாவது பாஜக சார்பாக போட்டியிட வேண்டும் என்று பாஜக தேசிய தலைமை முடிவு எடுத்துள்ளது. அதற்கேற்ப அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பீகாரில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாஜக தலைமையின் கவனம் முழுவதும் அங்குதான் இருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் தேசிய தலைவர்களின் தமிழக வருகை குறைந்துவிட்டது. பீகாரில் ஒருவேளை என்டிஏ கூட்டணி தோல்வி அடைந்தால், அது தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். இதனால் பீகாரில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

பீகார் தேர்தல் முடிவுக்கு பின் தமிழ்நாடு பக்கம் பாஜக தலைவர்களின் பார்வை திரும்பும் என்று கருதப்படுகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் தரப்பில் தமிழக பாஜகவை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பாஜகவின் வளர்ச்சி, பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள், பூத் கமிட்டியின் வலிமை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து ஒரு ரிப்போர்ட்டை கொடுத்துள்ளது.
அந்த ரிப்போர்ட்டின் படி, தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டுமென்றால், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வளர்ச்சி அடைய வேண்டும், அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்த, அங்கிருந்து தேர்தல் வெற்றிகள் பெற்றதே காரணம்.
அதனால் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் வலிமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தி இருக்கிறது. இதனை கவனமாக பார்த்த டெல்லி பாஜக தலைமை, தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என்று குறிப்பு அனுப்பி இருக்கிறது. அதற்கேற்ப பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளை தேர்வு செய்து பட்டியலை கொடுக்கவும் தமிழக தலைமைக்கு அனுப்பி உள்ளது.
மாவட்டத்திற்கு ஒரு எம்எல்ஏ என்று பாஜகவில் இருந்து உருவாகினாலே, அடுத்தடுத்து தமிழ்நாட்டில் பாஜக முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்று கணக்கு போட்டுள்ளது. இதனால் அதிமுகவிடம் இருந்து குறைந்தது 50 தொகுதிகள் வரை பாஜக தலைமை கேட்கும் என்றும், 40 முதல் 42 தொகுதிகள் வரை போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
சட்டத்தை விட ஆர்எஸ்எஸ் பெரிய அமைப்பு கிடையாது.. கணக்கு வழக்கை வெளியிடுங்க.. பகவத்திற்கு போன கடிதம்











Click it and Unblock the Notifications