சாய்கிறதா பாஜக.. மாறுகிறதா கலர்.. டெல்லியில் என்ன நடந்தது.. ஸ்டாலின் வெச்ச குறி.. மிரளும் அதிமுக
அதிமுகவுடன் பாஜகவுக்கு கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: ஒரு பெருத்த சந்தேகம் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.. அது, அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடருமா? முறியுமா? என்பதுதான்.. இப்படி ஒரு சந்தேகம் எழுவதற்கு பல்வேறு காரணங்களும், அனுமானமாக வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த முறை தேர்தலிலேயே பாஜக, அதிமுகவுடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் வந்தது.. "70 சீட் வேண்டும், நாங்கள் தனியா நின்னாலே ஜெயிப்போம், கோட்டையில் காவி கொடி பறக்கும்" என்று எல்.முருகன்தான் தினமும் சொல்லி கொண்டிருந்தாரே தவிர, அதிமுக வாயே திறக்கவில்லை.
அமித்ஷாவும், மோடியும் சென்னைக்கு 2,3 முறை வந்துசென்றபிறகுதான் கூட்டணியும், சீட்டும் முடிவானது.. அந்த அளவுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒரு தயக்கம் அதிமுகவுக்கே இருந்தது.

கூட்டணி
இப்போது விஷயம் என்னவென்றால், அப்படியே தலைகீழாக நிலைமை உருமாறி உள்ளது.. அதாவது, அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதா? வேணாமா? என்று யோசிக்கும் அளவுக்கு பாஜக சென்றுவிட்டது.. இதற்கெல்லாம் காரணம், ஸ்டாலின்தான்..!

மோடி
ஏனென்றால், ஊழல் லிஸ்ட்டை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின்.. சில மாஜிக்களும் குறி வைக்கப்பட்டுள்ளனர்.. சீனியர் முதல் ஜூனியர் வரை, முன்னாள்களின் பெயர்கள் டிக் ஆகி உள்ளது.. அதாவது கிட்டத்தட்ட 8 பேரை திமுக டார்கெட் செய்துள்ளது.. இதனால் அதிமுக கூடாரம் அதிர்ந்துபோயுள்ளது..
இதனிடையே ஸ்டாலின் டெல்லி சென்றபோதுகூட, இந்த விவகாரத்தை பற்றிதான் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

ஊழல்
ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து, இத்தனை வருடம் அரசியல் செய்து வரும் பாஜக, இதற்கு மட்டும் எப்படி துணை போகும்? அதனால், ஆக்ஷன் எடுக்க பாஜக மேலிடமும் ஓகே சொல்லிவிட்டதாக ஏற்கனவே செய்திகள் பரபரத்தன.

உள்ளாட்சி தேர்தல்
எனவே, கூடிய சீக்கிரம், சாட்டையை கையில் எடுக்க போகிறது திமுக.. இதில் யார் யார் சிக்குவார்கள், யார் யார் மீது வழக்கு பாயும் என தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது.. தேர்தல் சமயத்தில் அதிமுக ஜாம்பவான்கள் யாராவது கைதாகி உள்ளே சென்றால், அது பாஜகவுக்குதான் இழுக்கு என்றும் கருதப்படுகிறது. எனவேதான், கூட்டணியில் இருந்து பாஜக விலகுவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது..

அறிவுறுத்தல்
இதுபோக டாஸ்மாக் திறக்கப்பட்ட விஷயத்தில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததே தவிர, அதிமுக கப்சிப்பென்றுதான் இருந்தது.. இதுவும் பாஜகவுக்கு ஒரு வருத்தம்தான் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சசிகலாவை இணைத்து கொள்ள சொல்லி, பலமுறை பாஜக மேலிடம் அறிவுறுத்தியது.. அதை எடப்பாடி கொஞ்சம்கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை.. இந்த கோபமும் பாஜகவுக்கு இருக்கத்தான் செய்கிறதாம். போதாக்குறைக்கு இப்போது சசிகலாவின் ஆடியோவால், அதிமுக கூடாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

சசிகலா
எனவே, அவர்களின் கட்சி பிரச்சனைகளை தீர்க்கவே, அவர்களுக்கு நேரம் போதவில்லை.. தினம் ஒரு விவகாரம் வெடித்து கொண்டுள்ளது.. இதில் ஊழல், வழக்கு, ஜெயில் என்று போனால் நிலைமை இன்னும் மோசமாகி, அது தேர்தலில் எதிரொலித்துவிடக்கூடும் என்பதையும் பாஜக உணராமல் இல்லை. அதனால்தான், அதிமுகவை விட்டு விலகவும் யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது..

அதிரடி
அதேசமயம், அதிமுகவுடன்தான் கூட்டணி தொடரும் என்பதுபோல, எல்.முருகனும் இப்போதுவரை பேட்டிகளை தந்து வருகிறார்.. என்றாலும், திமுகவுடன் பாஜக கூட்டணி நீடிக்குமா? அல்லது தனித்து நின்று போட்டியிடுமா? அல்லது வேறு யாருடனாவது கூட்டணி வைத்து வரப்போகும் தேர்தல்களை சந்திக்குமா என்பது தெரியவில்லை.. ஆனால், ஸ்டாலினின் அதிரடிகள் காரணமாக, திமுக மீதான அதிருப்திகள் மெல்ல மெல்ல பாஜக குறைந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாம் சொல்ல வேண்டி உள்ளது... பார்ப்போம்..!
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications