பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? ஓ.பன்னீர் செல்வம் பதில்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோடநாடு சம்பவங்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த விவகாரம் நடந்து 2 வருடங்கள் ஆகின்றன. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி, தேர்தலில் ஆதாயம் பெற முயல்கிறார்கள். ஆதாரமில்லாத இந்த குற்றச்சாட்டை நாங்கள் எதிர்கொள்வோம்.

யாரிடமாவது ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம். ஊடகங்கள் வாயிலாக வதந்தி பரப்புவது, அவதூறு பரப்புவது சட்டப்படி குற்றம்.
பாஜகவை பொறுத்தளவில் அரசியல் ரீதியாக கூட்டணி மாறிக்கொண்டுள்ளது. முதலில் எங்களோடு கூட்டணி வைத்தனர், பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்தனர். பின்னர் எங்களுடன் வந்தனர். தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம். இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதா என்ற நிருபர்கள் கேள்விக்கு, எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் தெரிவிப்போம் என்றார் பன்னீர் செல்வம்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications