பாஜக 23, பாமக 23, தேமுதிக 6.. எல்லாம் போச்சு போங்க! மாஸ்டர் மைண்டை அனுப்பியது வேஸ்ட்! அமித் ஷா கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது பெரிய அளவில் பலனை கொடுக்கவில்லை என்று டெல்லி அப்செட்டில் உள்ளதாம். இவரை அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும் கூட்டணி உறுதியாகிவிடும் என்று அமித் ஷா நினைத்தது.. கைகூடவில்லை என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல்நாள் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அது போல் பியூஷ் கோயலுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்ஆர்சி நகருக்கு வந்த பியூஷ் கோயலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் வரவேற்றனர்.

பியூஷ் கோயல் வருகை

தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பையந்த் பாண்டாவிற்குப் பதிலாக பியூஷ் கோயல் இப் பொறுப்பை ஏற்றார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி உடன் அவர் சந்திப்பை நடத்தினார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், மமக, த.வா.க, ஏடிபி, ஏஐஎஃப்.பி மற்றும் எம்.வி.கே.இணைந்து மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றின. தி.மு.க மட்டும் 126 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அதே தேர்தலில், பா.ஜ.க. போட்டியிட்ட 20 தொகுதிகளில் நான்கு இடங்களை வென்றது. அ.தி.மு.க.வுடனான கூட்டணியும், வேட்பாளர்களின் தொகுதி familiarity-யும் 2001-க்குப் பிறகு பாஜக மீண்டும் மாநில சட்டசபையில் காலடி பதிக்க உதவின. 2024 மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் கூட, பா.ஜ.க. தனது வாக்கு சதவீதத்தை இரு இலக்க எண்ணாக அதிகரிக்க முடிந்தது.

பாஜகவின் வளர்ச்சி

பியூஷ் கோயலை மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அ.தி.மு.க.விடம் இருந்து 65 தொகுதிகளை பா.ஜ.க. கோரலாம் என்று நயினார் நாகேந்திரன் ஒரு பட்டியலை சமர்ப்பித்து இருந்தார் மத்திய அமைச்சர் என்ற அனுபவம் மட்டுமல்லாமல், கோயல் பல்வேறு மாநிலங்களில் கட்சியின் தேர்தல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். முக்கியமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஒருவர் நம்மிடம் தெரிவித்த தகவலில், "பாஜக அதிக இடங்களில் போட்டியிட வுள்ளது. இதன் பின்னணியில்தான் பியூஷ் கோயல் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில், 2019 மக்களவைத் தேர்தலில், இவரால்தான் பா.ஜ.க. சுமார் ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிந்தது. இவருக்கு அ.தி.மு.க. தலைமைடன் நல்லுறவு இருப்பதாகக் கூறப்படுகிறது" என்றார். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு முக்கியமான தொகுதிப் பங்கீட்டு ஏற்பாட்டில் கோயல் முக்கியப் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பியூஸ் கோயல் கேட்டது என்ன?

இந்த மீட்டிங்கில் பாஜகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி ஒப்புகொடண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளில், பாமகவிற்கு 23 தொகுதிகள், தினகரன் திரும்பி வந்தால் அமமுகவிற்கு 3 தொகுதிகள் வழங்க எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் கூட்டணி சமூகமாக இருக்கும் வகையில் ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும், கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைப்பது பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் மறுப்பு

ஆனால் டிடிவி தினகரன் இதை மறுத்துள்ளார். தேனி ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்களை தவிர்த்து விட்டு யாரும் வெற்றி பெற முடியாத நிலை நிலவுகிறது. தேசிய ஜனநாயக வட்டணியில் அமமுகவுக்கு 6 சீட்கள் ஒதுக்கீடு என்பது வதந்தி. ஊடகங்கள் செய்தியின் உண்மைதன்மை தெரியாமல் வெளியிடக் கூடாது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு நாங்கள் தான் கல்யாணம் செய்வோம், என்று கூறி உள்ளார்.

ஓ பன்னீர்செல்வமும் மறுப்பு

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் இந்த கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) நிர்வாகிகள் உடன் நேற்று ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதன்படி அதிமுகவில் மீண்டும் இணையலாமா? அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்கலாமா? திமுக உடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இதில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக உடன் இனி இணைய வேண்டாம்.. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இனி அதிமுக உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை .. இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. Option a தவெக Option b திமுக என்று இரண்டு ஆப்ஷன் கொடுத்து கேள்வி கேட்கப்பட்டது. இரு ஆப்ஷன்களை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடுப்பான அமித் ஷா

இதையடுத்தே மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது பெரிய அளவில் பலனை கொடுக்கவில்லை என்று டெல்லி அப்செட்டில் உள்ளதாம். இவரை அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும் கூட்டணி உறுதியாகிவிடும் என்று அமித் ஷா நினைத்தது.. கைகூடவில்லை என்று கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இரண்டு பேருமே கூட்டணிக்கு வரவில்லை. தேமுதிக, பாமகவும் இதை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதனால் பியூஸ் கோயலை அனுப்பியது தோல்வியில் முடிந்துவிட்டது என்று அமித் ஷா அதிருப்தியில் இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+