அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! எடப்பாடி, நயினார் நாகேந்திரன் சந்திப்பில் நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு நடத்தி இருக்கின்றனர். சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு நடத்தி இருந்தார்.

தேமுதிக யாருடன் கூட்டணி?
இந்த சந்திப்பின் காரணமாக பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் அதிமுக கூட்டணி பக்கம் தான் செல்வார் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.
பிரதமர் மோடி நிகழ்ச்சி
மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் பாஜகவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பின் போது பிரதமர் மோடியின் நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடியை வரவேற்பது யார் யார் என்பது குறித்து பேசப்பட்டிருக்கிறது.
எடப்பாடியுடன் சந்திப்பு
அதேபோல் பிரதமர் மோடியுடன் மேடையில் யார் யாரெல்லாம் அமர வேண்டும் என்பதும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான சில விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய பாஜகவினர் விரும்பி இருக்கின்றனர்.
தொகுதி பங்கீடு
அதேபோல் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications