யாத்திரை + சர்வே.. விடாமல் அடுத்தடுத்து சிக்ஸ் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி.. இது லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலுக்காக கட்சி ரீதியாக சர்வே எடுக்க உள்ளாராம். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எடப்பாடி இந்த சர்வேவை எடுக்க உள்ளாராம்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார்.
சர்வே
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலுக்காக கட்சி ரீதியாக சர்வே எடுக்க உள்ளாராம். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எடப்பாடி இந்த சர்வேவை எடுக்க உள்ளாராம். அதன்படி அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமல் எவ்வளவு வெற்றி வாய்ப்பு இருந்தது. பாஜக கூட்டணியோடு எவ்வளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாஜக மூலம் எத்தனை வாக்குகள் அதிமுகவை நோக்கி வருகின்றன வெளியே செல்கின்றன. முதலமைச்சர் முகங்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. விஜயால் அதிமுகவிற்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? திமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளதா சரிந்து உள்ளதா?ஆட்சிக்கு ஆதரவான எதிரான மனநிலைகள் உள்ளதா? அதிமுக எந்தெந்த மண்டலங்களில் வலுவாக உள்ளது. எந்தெந்த மண்டலங்களில் வலிமை இன்றி உள்ளது என்று பல விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சர்வே மூலம் அறிய உள்ளாராம். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் எடப்பாடி ஒப்பந்தம் செய்ய உள்ளாராம்.
யாருக்கு சாதகம்
இந்த கூட்டணி காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கு சாதகம்.. யாருக்கு பாதகம் என்று இங்கே பார்க்கலாம். முதலில் பாஜக அதிமுக கூட்டணி அமைவதால் எத்தனை முனை போட்டி நிலவும் என்று பார்க்கலாம். இந்த கூட்டணி காரணமாக நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த கூட்டணிக்கு வராமல் போகலாம். ஏனென்றால்.. நாம் தமிழர் - பாஜக எதிர் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி. விஜய் வேறு தலைமையிலான.. அதாவது எடப்பாடி தலைமையிலான கூட்டணிக்கு வர மாட்டார். இதனால் 4 முனை போட்டி.. அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி , தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும். இந்த நிலையில்தான் தேர்தலுக்கு தயாராவதற்காக எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளாராம்.
எடப்பாடி பழனிசாமி பாதயாத்திரை
2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அவரின் ஸ்டைலில் தற்போது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளாராம். சமீபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூட்டணி
ஊரக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சுற்றுப்பயணம் போனால்.. கட்சி மீண்டும் வளரும்.. மக்களிடம் நாம் சென்று சேரலாம் என்று எடப்பாடி நினைக்கிறாராம். இதை மனதில் வைத்தே 234 தொகுதிகளிலும் மே இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்.என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாராம். கூட்டணி அமைத்துவிட்டோம்.. அடுத்து தேர்தல் பணிகள்தான்.. 234 தொகுதிகளிலும் மே இறுதியில் யாத்திரை மேற்கொண்டால் சூழல் நமக்கு சாதகமாக மாறும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறாராம்.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications