ஒற்றை தலைமை.. ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்.. அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
Recommended Video
அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரட்டை தலைமையின் கீழ் கட்சி செயல்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் முதலே அதிமுகவின் கூட்டணி தேர்வு, சீட் ஒதுக்கீடு செய்தது, வேட்பாளர் தேர்வு, கட்சியின் செயல்பாடு உள்ளிட்டவைகளால் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது.

ஒற்றை தீர்வு
இதையடுத்து பலர் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிவிட்டனர். இன்னும் சிலர் அதிமுகவை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே உள்ளார்கள். இந்த பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ஒற்றை தலைமை என்ற கோஷம் அதிமுகவில் ஏற்கெனவே ஒலிக்கத் தொடங்கியது.

இரட்டை தலைமை
அதாவது இரட்டை தலைமை இருப்பதால் இருவரும் தங்கள் தரப்பினருக்கு போட்டி போட்டு கொண்டு பதவிகளையும் தேர்தல் சீட்டுகளையும் கொடுத்து வருகிறார்கள். பல தருணங்களில் நீயா நானா போட்டி ஏற்பட்டது. அதிலும் சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகு இந்த கோரிக்கை மேலும் ஒலித்தது.

பொதுச் செயலாளர்
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் விரைவில் பொதுச் செயலாளராக தேர்வாக போகும் எடப்பாடி பழனிச்சாமி என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்டவை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது.

சென்னை ராயப்பேட்டை
இந்த கூட்டத்தை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனித்தனியே பிரிந்து ஒற்றை தலைமை வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

ஒன்றுப்படு
உள்ளே ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஒன்றுப்படு, ஒற்றை தலைமையின் கீழ் ஒன்றுபடு என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த இரு தரப்பு நிர்வாகிகளும் அவர்களை சமாதானம் செய்தனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?











Click it and Unblock the Notifications