என்னவாம்? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலில் ரத்து- இப்ப அதிமுக செயற்குழு கூட்டம் கேன்சல்!
சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற இருந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொறுப்பேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 7-ந் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

ஆனால் திடீரென இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 07.04.2023 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், பிற மாநில கழகச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

அதாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யபப்ட்டு செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழுக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில காரணங்களுக்காக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications