சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலில் விழுந்து வாக்கு கேட்க சொன்ன அமைச்சர்.. அப்படியே செய்த பூந்தமல்லி அதிமுக வேட்பாளர்!

Google Oneindia Tamil News

சென்னை: பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு கேட்குமாறு அமைச்சர் பெஞ்சமின் சொன்னதால், அவர்களின் காலில் விழுந்து பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் வாக்கு கேட்டார்.

வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

AIADMK candidate vaithiyanathan who fell on the people feet and asked the vote

இந்த 18 தொகுதிகளில் வென்றால் திமுக ஆட்சியை பிடித்துவிடும். அதேநேரம் அதிமுகவும் ஆட்சியை தக்கவைக்க இடைத்தேர்தலில் அதிக வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தோம்.. ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தோம்.. "நல்லாருக்கேன்".. குஷிப்படுத்திய "கேப்டன் குரல்"

இந்நிலையில் சென்னை பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தியநாதன் போட்டியிடுகிறார். அவர் நேற்று சோராஞ்சேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் அமைச்சர் பெஞ்சமினும் உடன் சென்றார்.

வேட்பாளர் வைத்தியநாதனிடம் அமைச்சர் பெஞ்சமின், பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு கேட்குமாறு கோரினார். இதனை ஏற்று வைத்தியநாதன் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். இதனை பார்த்த பொதுமக்கள் வியப்பு அடைந்தாலும், இதெல்லாம் தேர்தலில் சாதாரணம் என்ற ரீதியில் பேசியதால் கலகலப்பான சூழல் காணப்பட்டது.

நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

English summary
Poonamallee AIADMK MLA candidate vaithiyanathan who fell on the people feet and asked the vote in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X