சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சநீதிமன்றம் சொன்னது எங்களுக்குதான் சாதகம்.. எடப்பாடி அணியின் ராஜன் செல்லப்பா விளக்கம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எங்களுக்கு ஆதரவான தீர்ப்பாகத்தான் கருதுகிறோம் என்று இபிஎஸ் அணியின் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: எங்களுக்கு ஆதரவான தீர்ப்பாகத்தான் இதை கருதுகிறோம் என்றும், ஊரறிந்த உண்மையை மீண்டும் நிரூபிக்க உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பின் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரு தரப்பை சேர்ந்தவர்களும் அதாவது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.

இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ட்விஸ்ட்.. அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்யனும்.. ஓபிஎஸ்சும் இருக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் ட்விஸ்ட்.. அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்யனும்.. ஓபிஎஸ்சும் இருக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் மனு

உச்ச நீதிமன்றத்தில் மனு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கடந்த மாதம் 30-ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் உள்பட கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்தன. இந்த முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம், 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை இன்று ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகத்தான் வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அணி தரப்பின் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அகூறியதாவது:- எல்லோரும் அறிந்த ஒன்றை மீண்டும் நிரூபிக்க சொல்லியிருக்கிறார்கள். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தான் முன்னின்று தகவலை சொல்ல வேண்டும் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ஆகவே பொதுக்குழு தேர்ந்தெடுத்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இந்த பொதுக்குழுவை கூட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் வேறு யாரும் இதை கூட்டவும் முடியாது.

மீண்டும் நிரூபிக்க சொல்லியிருக்கிறார்கள்

மீண்டும் நிரூபிக்க சொல்லியிருக்கிறார்கள்

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகத்தான் வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அணி தரப்பின் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அகூறியதாவது:- எல்லோரும் அறிந்த ஒன்றை மீண்டும் நீருபிக்க சொல்லியிருக்கிறார்கள். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தான் முன்னின்று தகவலை சொல்ல வேண்டும் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ஆகவே பொதுக்குழு தேர்ந்தெடுத்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இந்த பொதுக்குழுவை கூட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் வேறு யாரும் இதை கூட்டவும் முடியாது.

கட்சிக்காக தேர்தலை ஒத்திப்போட மாட்டரக்ள்

கட்சிக்காக தேர்தலை ஒத்திப்போட மாட்டரக்ள்

பொதுக்குழுவை கூட்டும் போது ஓபிஎஸ் கலந்து கொள்வாரா என்று தெரியவில்லை . ஏனென்றால் அவருக்கு ஆதரவு இல்லை என்பது நன்றாகவே தெரியும். ஏற்கனவே கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தவர். ஆகவே ஓபிஎஸ் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு குறைவு என்றே கருதுகிறேன். ஆகவே. இந்த பொதுக்குழுவை தவிர்க்கத்தான் ஓபிஎஸ் அணி விரும்பும். இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் அணி கலந்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை. ஒரு கட்சிக்காக தேர்தலை ஒத்திப்போட மாட்டரக்ள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Rajan Chellappa of the Edappadi Palaniswami team said that we consider this as a judgment in our favor and the Supreme Court has asked us to prove the truth again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X