கர்நாடகா பாஜக கூட்டத்தில் அண்ணாமலை முன் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு- அதிமுக கண்டனம்
சென்னை: கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்பாக தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு அண்ணா திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகா தேர்தல் களத்தில் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையாகவும் வெடித்து வருகின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை கர்நாடகாவில் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட போது பணம் எடுத்து சென்றார் என ஏற்கனவே புகார் உள்ளது.
மேலும் அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி; அதனால் போலீஸ் அதிகாரிகளிடம் செல்வாக்கு செலுத்தி வருகிறார் அண்ணாமலை. அவரை கர்நாடகாவில் தேர்தல் பணியாற்றுவதற்கு அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற புகாரும் தேர்தல் ஆணையத்தின் முன் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சிமோகாவில் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்தை பாதியிலேயே நிறுத்த சொன்னார் ஈஸ்வரப்பா. அப்போது அண்ணாமலை எதுவும் பேசாமல் அமைதி காத்தார். பின்னர் கர்நாடகா மாநில வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
கர்நாடகாவில் பாஜக பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை முன்பாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜகவோ இந்த புகாரை நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக பதிலளித்த அண்ணாமலை, தமிழ்த் தாய் வாழ்த்து சரியான முறையில் ஒலிபரப்பு செய்யப்படவில்லை. அத்துடன் கர்நாடகாவில் அம்மாநில வாழ்த்துப் பாடலை முதலில் ஒலிபரப்ப வேண்டும்; பின்னரே பிற மாநில வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆகையால் ஈஸ்வரப்பா செய்தது சரிதான் என நியாயப்படுத்தினார்.
தற்போது தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் பாஜகவுக்கு அண்ணா திமுகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா பாஜக கூட்டத்தில் தம்ழ்த் தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications