கப்புனு கையில் எடுத்த அதிமுக.. திமுக கூட்டணி கட்சி தலைவரின் பேச்சை சுட்டிக்காட்டி அரசு மீது அட்டாக்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய வீடியோவை வெளியிட்டு, “ஸ்டாலின் மாடல் என்பது அதிகார அடக்குமுறைக்கான பாசிச மாடல் என்பதற்கு கூட்டணி கட்சிகளின் இத்தகைய வாக்குமூலங்களே சாட்சி” என்று அதிமுக விமர்சித்துள்ளது.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அந்தப் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
"தமிழகத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன்.. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் செய்துவீட்டீர்களா? இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும். சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக திமுக அரசு செயல்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் செய்வோம்." என எச்சரிக்கை விடுத்தார் கே.பாலகிருஷ்ணன்.
முன்னதாக, தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் சங்கம் தத்தெடுப்பதாக தகவல் வெளியானதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
“இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சி. அரசுப் பள்ளிகள் தனியார்மயம் ஆக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்த தகவலை மறுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உண்மை என்னவென்று தீர ஆராயாமல், பள்ளிகளை தத்துக் கொடுப்பதாக கண்டனம் தெரிவித்தவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பாக தான் கண்டனம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக, சிபிஐஎம், திமுக அரசு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து திமுக அரசை விமர்சித்துப் பேசியிருப்பதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது அதிமுக.
இதுதொடர்பாக, அதிமுக ஐடி விங் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன் பேசிய வீடியோவை பதிவிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்துக் கேட்கிறேன்... தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப் படுத்திவிட்டீர்களா நீங்கள்?" என்று கேட்பவர் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
திமுக ஆட்சியில் மக்கள் ஊர்வலங்கள் நடத்தக் கூடாதா? தமிழ்நாட்டிலே மக்கள் இயக்கங்கள் நடத்தக் கூடாதா? மக்கள் உரிமைக்காக போராடினால் கைது செய்வதா? ஸ்டாலின் மாடல் என்பது அதிகார அடக்குமுறைக்கான பாசிச மாடல் தான் என்பதற்கு கூட்டணி கட்சிகளின் இத்தகைய வாக்குமூலங்களே சாட்சி!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications