புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்.. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அதிமுக அறிவிப்பு
சென்னை: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், அதிமுக பங்கேற்பதாக கூறியுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினமான இன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்தார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஆளுநர் மாளிகை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனினும் தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, ரகுபதி, மா சுப்பிரமணியன் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆளுநர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. இதேபோல் பாஜக சார்பில் ஜி கே மணி பங்கேற்கிறார். சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் முக்கியப் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications