நெருங்கும் லோக்சபா தேர்தல்! வெற்றி வியூகம் வகுக்க.. மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டுகிறது அதிமுக
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்திருக்கிறது. இன்று தேர்தல் அறிக்கையை கட்சி வெளியிட இருக்கும் நிலையில், இன்று சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவை பொறுத்த அளவில், 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

1.வடசென்னை - ராயபுரம் மனோ
2.தென்சென்னை - ஜெயவர்த்தன்
3.காஞ்சிபுரம் - ராஜசேகர்
4.அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
6.ஆரணி - கஜேந்திரன்
7.விழுப்புரம் - பாக்யராஜ்
8.சேலம் - விக்னேஷ்
9.நாமக்கல் - தமிழ்மணி
10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11.கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
12.சிதம்பரம் - சந்திரஹாசன்
13.நாகை - சுர்ஜித் சங்கர்
14.மதுரை - சரவணன்
15.தேனி - நாராயணசாமி
16.ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17.கோவை - சிங்கை ராமச்சந்திரன்
18.பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
19.திருச்சி - கருப்பையா
20.பெரம்பலூர் - சந்திரமோகன்
21.மயிலாடுதுறை - பாபு
22.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
23.தருமபுரி - அசோகன்
24.திருப்பூர் - அருணாசலம்
25.நீலகிரி - லோகேஷ்
26.வேலூர் - பசுபதி
27.திருவண்ணாமலை - கலியபெருமாள்
28.கள்ளக்குறிச்சி - குமரகுரு
29.சிவகங்கை - சேவியர் தாஸ்
30.நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
31.புதுச்சேரி - தமிழ்வேந்தன்
32.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
33.கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், ஆரணி, தர்மபுரி, சேலம், தேனி, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, பெரம்பலூர், கோவை, வேலூர், தூத்துக்குடி என 18 தொகுதிகளில் திமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது.
அதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வேட்பாளர்களுக்கான பரப்புரையை வரும் 24ம் தேதி எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக, பாஜக, தமாக, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் இந்த முறை கூட்டணிக்கு மூன்று கட்சிகள் மட்டுமே வந்திருக்கிறது. எனவே, அதிமுக தலைமை இந்த தேர்தலை எதிர்கொள்வதில் தடுமாறி வருகிறது. இதனை சமாளித்து, தேர்தல் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க இன்று சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கைகள் குறித்த விவரங்களும் விவாதிக்கப்பட இருக்கிறது. தேர்தல் பணிகள், மாவட்ட செயலாளர்களுக்கான வேலை போன்றவை இதில் பிரித்து கொடுக்கப்பட இருக்கின்றன. கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட செயலாளர்களின் பணிகள் போதுமான அளவு இல்லாததால்தான் அதிமுக தோல்வியடைந்ததாக சொல்லப்பட்டது. எனவே லோக்சபா தேர்தலுக்கு இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடலில் கட்சி இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications