ஓவர்.. ஓவர்.. எல்லாரும் சென்னைக்கு வாங்க.. அதிமுக மா.செக்களுக்கு ஆர்டர் போட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: வரும் 22ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. பாமக அதிமுகவுடன் பேசி வந்த நிலையில் நேற்று பாஜக பக்கம் சென்றுவிட்டது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 லோக்சபா சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவும் காலம் தாழ்த்துவதால், கூட்டணி தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் அதிமுக திணறி வந்தது.

இந்நிலையில், நேற்று மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தியதுடன், கூட்டணியை உடனே இறுதி செய்தாக வேண்டும் என திட்டமிட்டு, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் திட்டமிட்டார்.
அதன்படி மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட்டு, கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்கின்றனர்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு இன்று மாலையுடன் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளையும் முடித்து, அதனை இறுதி செய்யும் வேலையில் அதிமுக தரப்பு இறங்கியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கும் நிலையில் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், மார்ச் 22ஆம் தேதி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 27ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உடனடியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி, களத்தில் இறங்கிச் செயல்படுவது பற்றி மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி, மா.செக்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாக தெரிகிறது.
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
அமித்ஷாவுக்கு டப்பிங் கொடுக்க வெக்கமா இல்லையா.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய சிதம்பரம் -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications