அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக தலைமையில் புதிய மெகா கூட்டணி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.
அதிமுக தலைவர்களை சீண்டும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என செப்டம்பர் 18-ந் தேதியும் நேற்றும் அதிமுக இரு முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடபபாடி பழனிசாமி தலைமை வகித்தார்.
பாஜக வேண்டவே வேண்டாம்: இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துதான் ஆக வேண்டும்; அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.
பாஜகவை பகைத்தால் விபரீதம்: ஆனால் டெல்லி பாஜகவிடம் வசமாக சிக்கி இருக்கிறோம்; இந்த சூழ்நிலையில் பாஜகவை அனுசரித்துதான் போக வேண்டும்; பாஜக கேட்கும் தொகுதிகளை அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக கேட்கிற 20 தொகுதிகளைக் கொடுத்துவிட்டாலே பாதி பிரச்சனை முடிந்துவிடும்; அதனால் தேவை இல்லாமல் பாஜகவுடன் மோத வேண்டம; அப்படி மோதுவது என முடிவெடுத்துவிட்டால் அதிமுகவுக்குள் தேவை இல்லாத குழப்பங்கள் தானாக வரும்; அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என சில தலைவர்களும் பேசி இருக்கின்றனர். இத்தகைய பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
பாஜக கூட்டணிக்கு முழுக்கு- தீர்மானம்: இந்தக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக தவிர இதர கட்சிகளுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும் அதிமுக முடிவு செய்தது. இதனை அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் அறிவித்தார். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications