திமுக மீது ஆக்சன்.. அதிமுக மீது நோ ஆக்சன்.. எடப்பாடி போட்ட 10 கண்டிஷன்.. ஏற்றுக்கொண்ட அமித் ஷா!
சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைய எந்த நிபந்தனையும் எடப்பாடி பழனிச்சாமி முன்வைக்கவில்லை என்று அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், நிபந்தனையுடன் தான் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, என்றுள்ளார்.
நிபந்தனைகள்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைய எந்த நிபந்தனையும் எடப்பாடி பழனிச்சாமி முன்வைக்கவில்லை என்று அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், நிபந்தனையுடன் தான் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
1. தமிழகத்தில் என்.டி.ஏ.வுக்கு அதிமுகதான் தலைமை.
2. அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது (அதாவது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வலியுறுத்தக்கூடாது).
3. சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் அதிமுக போட்டியிடும், அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
4. பாஜகவுக்கான இடங்களை மட்டுமே நீங்கள் கேட்டுப்பெறலாம், கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தான் சீட் ஒதுக்கும்.
5. வெற்றி வாய்ப்புக்கான தொகுதிகளை அடையாளப்படுத்தி பாஜக தருகிற பட்டியலில் 50 சதவீதம் பாஜக கேட்கும் தொகுதிகளையும், 50 சதவீதம் அதிமுக கொடுக்கும் தொகுதிகளையும் ஏற்கவேண்டும்.
6. தே.ஜ.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அதிமுகவால் முன்னிறுத்தப் படுபவர்தான்.
7. அதிமுகவினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எதிரான வழக்குகளில் மேற்கொண்டு நடவடிக்கைகள் அடுத்தக்கட்டத்திற்கு நகரக்கூடாது.
8. திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே அண்டர் டீலீங் இருப்பதாக அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
9. திமுகவின் முக்கிய அமைச்சர்களின் ஊழல்களுக்கு எதிராக அவர்கள் மீதான நடவடிக்கையில் சீரியஸ் காட்ட வேண்டும்.
10. கூட்டணி ஆட்சிக்கு நிர்பந்திக்கக்கூடாது ; இந்த பிரச்சனையில் சூழல்களை ஒட்டி அதிமுகதான் முடிவு எடுக்கும்.
இந்த 10 நிபந்தனைகள் அதிமுக தரப்பில் வைக்கப்பட்டதை அமித் ஷா ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதனையடுத்தே கூட்டணி உறுதியாகியிருக்கிறது. டெல்லியில் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சந்தித்துவிட்டு திரும்பியதையடுத்து, கூட்டணி தொடர்பானவைகள் சீக்ரெட்டாக நடந்து கொண்டு தானிருந்தன. அதாவது, டெல்லியில் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு பேச்சுவார்த்தை முற்றுப்பெறவில்லை; அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருந்தது. அதாவது, எடப்பாடியின் ஓவரால் நம்பிக்கைக்கு உரியவரான சேலம் இளங்கோவனை டெல்லியில் தங்கியிருக்க எடப்பாடி ஏற்பாடு செய்திருந்தார். அந்த இளங்கோவன் மூலமாகத்தான் இந்த நிபந்தனைகள் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதெல்லாம் ஒரு கட்டத்தில் ஒரு வடிவத்துக்கு வந்தப் பிறகு அமித் ஷாவின் சென்னை பயணம் இறுதி செய்யப்பட்டது என்கின்றனர் அதிமுக-பாஜக கூட்டணி ரகசியங்களை அறிந்தவர்கள்












Click it and Unblock the Notifications