ஜனவரி டேட் குறிச்சாச்சு.. ஏரியா ஏரியாவாக சுற்றுப்பயணம் போகும் எடப்பாடி.. மாபெரும் அறிவிப்பு!
சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன
ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பொதுக்குழு இன்று கூடியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று டாப் தலைவர்கள் பலர் நினைக்கிறார்களாம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனராம். அதிமுகவில் இது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று நடக்கும் கூட்டம் அதிகம் கவனம் பெற்றுள்ளது.
தீர்மானம்: இதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், தமிழ் நாட்டில் மிகப் பெரிய பேரழிவை 'ஃபெஞ்சல்' புயல் ஏற்படுத்திய நிலையில் அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை எதையும் செய்யாமல். பேரிடர் காலங்களில் மக்களுக்கான குறைந்தபட்சம் உணவு. உறைவிடம். குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட ஒழுங்காக, முறையாக நிறைவேற்றாத திரு. ஸ்டாலினின் தலைமையிலான விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம். விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருட்கள் நடமாட்டம். ஏழை, எளிய, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு. சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு. பால் விலை உயர்வு. பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு. முத்திரைத் தாள் கட்டண உயர்வு. வழிகாட்டி மதிப்பீடு உயர்வு என்று தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் நிர்வாகத் திறமையற்ற திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
கழக ஆட்சியின்போது குடிமராமத்துத் திட்டம். தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை. விடியா திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தத் தவறியதற்கு கண்டனம். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையையும், சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்தி உள்ளார்.
மேலும், 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி அவைகளை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்காமல். திட்டமிடல் எதுவுமின்றி விளம்பரத்திற்காக 'ஃபார்முலா 4' கார் பந்தயம் நடத்துதல், வரைமுறையின்றி சிலைகள் வைத்தல், பூங்காக்கள் அமைத்தல் பேனா நினைவுச் சின்னம் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு கூட்ட அரங்கம் கட்டுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து, ஆடம்பர செலவு செய்து. மக்கள் நலன்களை பின்னுக்குத் தள்ளி அரசு நிதியை வீணடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications