கையில் ஃபைலுடன்.. அமித் ஷாவை பார்க்க போன எடப்பாடி.. செங்கோட்டையனை விடுங்க.. செக் வேறு ஒருத்தருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் சிலர் அதிமுகவிற்கு எதிராக காய்களை நகர்த்துவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். இது தொடர்பாக இன்று டெல்லி பயணத்தில் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஃபைல் ஒன்றை அளிக்க உள்ளாராம்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பு வகிக்கிறார். இருந்தபோதிலும், பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை இன்னும் கட்சியில் கணிசமான செல்வாக்குடன் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக அதிமுக கூட்டணியை விரும்பாத அண்ணாமலைக்கு நெருக்கமான சிலர் அதிமுகவிற்கு எதிராகவும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது .

nainar nagendran bjp

தமிழக பாஜகவில் அண்ணாமலையின் செல்வாக்கு

முக்கியமாக, அதிமுக கூட்டணியை விரும்பாத அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அதிமுகவுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பதால், தமிழக பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார் எனத் தெரிய வருகிறது. இது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் அண்ணாமலைக்கு திமுக வட்டாரத்திலும் நல்ல ஆதரவு உள்ளது.

கட்சித் தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்தாலும், பல முக்கியமான விஷயங்களில் அண்ணாமலையின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பயன்படுத்தி, அவ்வப்போது அதிமுகவிற்கு எதிராக சில நடவடிக்கைகளை அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் மேற்கொள்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தோல்வி

எடப்பாடி பழனிசாமி தோல்வியடைய வேண்டும் என்று பாஜகவில் ஒரு குழு செயல்படுவதாக கூறப்படுகிறது. "அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால், எடப்பாடியின் வளர்ச்சி தடுக்க முடியாததாகிவிடும். இது பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்" என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. எனவே, பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சி ரீதியாக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். புதிய தலைவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப கட்சி நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அதேபோல், அண்ணாமலை நியமித்த பல நிர்வாகிகளை மாற்ற நயினார் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே நயினார் நாகேந்திரன் திமுகவை கடுமையாக விமர்சிப்பதில்லை என்றும், போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்ற குறைபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆ. ராசா, அமித் ஷாவை விமர்சனம் செய்தபோது நயினார் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. டெல்லி அழுத்தம் கொடுத்த பின்னரே அவர் போராட்டம் செய்தார். நயினாரின் இந்த அணுகுமுறையை அண்ணாமலை, அமித் ஷாவிடம் நேரடியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி தரப்பும் நயினார் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, தலைவர் நயினார் இருந்தாலும், அவர் அணிந்திருக்கும் உடை அண்ணாமலையுடையது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது. இதன் மூலம், புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலையின் செல்வாக்கு இன்னும் அதிகமாக இருப்பதாகவும், இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பாஜகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளைப் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி புகார்

இது தொடர்பாகவே.. தமிழக பாஜகவில் சிலர் அதிமுகவிற்கு எதிராக காய்களை நகர்த்துவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். இது தொடர்பாக இன்று டெல்லி பயணத்தில் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஃபைல் ஒன்றை அளிக்க உள்ளாராம்.

அதாவது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பு வகிக்கிறார். இருந்தபோதிலும், பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை இன்னும் கட்சியில் கணிசமான செல்வாக்குடன் உள்ளார். அவரின் ஆட்கள் கூட்டணிக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பாஜகவிலேயே சிலர் வேலை பார்க்கிறார்கள்.

அதேபோல் அண்ணாமலைக்கு திமுக வட்டாரத்திலும் நல்ல ஆதரவு உள்ளது. பல அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். இதை உடனே விசாரியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கையில் ஒரு ஃபைலுடன் அமித் ஷாவை சந்திக்க சென்று உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+