Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த பயனும் இல்லை..24 மணி நேரத்தில் இப்படியா? சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..லிஸ்ட் போட்ட எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது எனவும், இனி இந்த திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்தப் பயனும் இல்லை என தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Edappadi Palaniswami mk stalin law and order

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொலையாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 11 பேரை கைது செய்தனர் இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் சென்னையின் மிகப் பிரபலமான ரிச்சி ஸ்ட்ரீட்டில் பிரபல யூட்யூபரான ஏ2டி நந்தகுமாரை குடிபோதையில் இருந்த மர்ம நம்பர்கள் மிரட்டியதோடு அவரது கேமராவை பிடித்து பிடிங்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் அடுத்தடுத்த குற்றம் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ராத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக அருண் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளான திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் கொலை சம்பவங்களும் கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது எனவும், இனி இந்த திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்தப் பயனும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடந்த குற்ற சம்பவங்களை பட்டிலியிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:

●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை. ●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை. ●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!” என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று,”எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. குறிப்பாக கொலை,கொள்ளை,திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது..எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்யமாக இருந்து வருகிறது. இதை ஒடுக்க வேண்டும் என்றால் காவல்துறையிற்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு ரவுடிகளை அடக்க முடியும். மேலும்தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+