4 சரவெடிகள்.. மொத்தமா எல்லாமே மாறும்.. அதிமுகவில் இது மட்டும் நடந்தா "ஆட்டம் க்ளோஸ்".. அதிரும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் மெகா கூட்டணி என்ற பேச்சுவார்த்தை ஒரு பக்கம் எழுந்துள்ளது, இன்னொரு பக்கம் அமித் ஷாவை சென்னைக்கு வரும்போதெல்லாம் சென்று சந்திக்க வேண்டியது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அதிமுகவில் நடைபெற்று வரும் இந்த அதிரடி சம்பவங்கள் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன.

எடப்பாடி கொடுத்த இரண்டு ஸ்டேட்மென்ட்கள்தான் பல்வேறு அரசியல் விவாதங்களை உருவாக்கி உள்ளது. முதல் ஸ்டேட்மென்ட் நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்கூட்டத்தில் கடந்த வாரம் சொன்னது.

அதில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது.

கூட்டணி

கூட்டணி

பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம். நாங்கள் கண்டிப்பாக மெகா கூட்டணி அமைப்போம். அதன் மூலம் தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

அதன்பின் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி மெகா கூட்டணியில் 1 சதவிகிதம் கூட அமமுகவிற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார். பின்னர் அமித் ஷா பற்றிய கேள்விக்கு, . அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

சரவெடி 1

சரவெடி 1

எடப்பாடி கொடுத்த இரண்டு பேட்டிகளும் 4 விதமான சரவெடிகளை தமிழ்நாடு அரசியலில் கொளுத்தி போட்டுள்ளது. முதல் விஷயம் அதிமுக அமைக்க போகும் மெகா கூட்டணி எப்படி இருக்கும் என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சேருமா. நாம் தமிழர் போன்ற கட்சிகள் சேருமா? மெகா கூட்டணி என்றால் என்ன அர்த்தம் என்ற விவாதத்தை எடப்பாடியின் பேச்சு எழுப்பி உள்ளது.

சரவெடி 2

சரவெடி 2

இரண்டாவதாக எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சென்னை வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டியது இல்லை என்றுள்ளார். இதனால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு நாட்களாக வந்த செய்திகள் மேலும் வலிமை அடைந்து இருக்கின்றன. அதாவது பாஜகவை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் எடப்பாடியின் அதிமுக இருக்கிறதா? புதிய கூட்டணி அமைக்க திட்டமிடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

சரவெடி 3

சரவெடி 3

அதிமுக மட்டும் ஒருவேளை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால்.. அது தமிழ்நாட்டில் அரசியல் நிலவரத்தையே மாற்றும். அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து விடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முக்கியமாக பாஜக கணிசமான வாக்குகளை இழக்கும். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி உடைவதை பாஜக அனுமதிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

சரவெடி 4

சரவெடி 4

எடப்பாடிக்கு பதில் அளிக்கும் விதமாக இன்று டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், அதிமுகவுடன் அமமுக கூட்டணி வைக்க 1 சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை. நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக அல்லது காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று கூறி உள்ளார். இதனால் அதிமுக இணையும் கூட்டணிக்கு எதிராக வேறு தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி என்றால், திமுகவுடன் இணைந்து செயல்பட அவர் தயாராகி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+