விஜய் சொன்னதை கேளுங்க.. இல்லைன்னா இப்படித்தான் நடக்கும்! எடப்பாடிக்கு செக் வைக்கும் டெல்லி?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைக்கமாக செல்லும்படி எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி பாஜக உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயுடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என ஈபிஎஸ்-ஐ அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. அதிமுக கட்சி வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, அமித் ஷா தனிப்பட்ட முறையில் ஈபிஎஸ்-க்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். விஜயை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பது மிக முக்கியமான பணி என்று அமித் ஷா அப்போது வலியுறுத்தியுள்ளார்.
அமித் ஷா - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
ஏதாவது செய்யுங்கள்.. எந்த offer வேண்டுமானாலும் கொடுங்கள்.. விஜயை சம்மதிக்க வைத்து, தமிழக பாஜக, அதிமுக, மற்றும் TVK ஆகிய மூன்று கட்சிகளும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு ஈபிஎஸ்-க்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இரு தலைவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்குமாறும் அமித் ஷா, ஈபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்
இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் விஜயின் அதிகரித்து வரும் செல்வாக்கு, மாநிலத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பாஜக தலைமை நம்புகிறது. சமீபத்தில் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தொடங்கிய விஜய், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் தமிழகத்தில் ஏற்கெனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மாற்றத்தை எதிர்பார்க்கும் நகர்ப்புற மற்றும் நடுத்தர வாக்காளர்களின் பெரும் பிரிவினரை அவரது கட்சி ஈர்க்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமித் ஷாவின் இந்த நடவடிக்கை, தென்னிந்தியாவில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கான பாஜகவின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி ஆர்வம் காட்டவில்லை
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் வந்தால் அவர் மெயின் பிக்சர் ஆகிவிடுவார். அவரை சுற்றி பிரச்சாரம் சுழன்றுவிடும். அவர் பெரிய நபராக மாறிவிடுவார். அதோடு தமிழ்நாட்டில் அவரை நாம் வளர்ந்துவிட்டால் நமக்குத்தான் சிக்கலாகி விடும். அதை அனுமதிக்க கூடாது.
அதோடு விஜய் துணை முதல்வர் பதவி கேட்பார். 100 + தொகுதிகளை கேட்பார். இதெல்லாம் சரியாகாது என்று எடப்பாடி நினைக்கிறாராம். இதனால் அமித் ஷா பேச்சை எடப்பாடி பெரிதாக கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமித் ஷா ஆக்சன்
இதையடுத்தே அதிமுகவில் அமித் ஷா மீண்டும் புயலை கிளப்பி உள்ளார் என்கிறார்கள். அதாவது நேற்று செங்கோட்டையன் - ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மதுரையில் சந்தித்தனர். இதற்கு பின் டெல்லி பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடியின் கண்ட்ரோலை தனது கையில் வைத்து கொள்ளும் விதமாக இவர்களை டெல்லிதான் இவர்களை மொத்தமாக களமிறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு தமிழ்நாட்டில் பெரிய கூட்டணியை உருவாக்குங்கள். விஜய் உள்ளிட்டோர் வந்தால் அவர்களின் பேச்சை கேளுங்கள்.. அவர்களுக்கு இடம் கொடுங்கள்.. அவர்களுடன் இணக்கமாக செல்லுங்கள்.. என்று டெல்லி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
-
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications