சண்டை போட சட்டசபையா கிடைத்தது.. எடப்பாடி, ஓபிஎஸ் கோஷ்டி மோதலால் திடுக்கிட்ட மக்கள்
சென்னை: அதிமுக நான்கு அணிகளாக பிரிந்தாலும் உக்கிர மோதல் என்பது இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகளுக்கு இடையேதான். அதிமுக தலைமை அலுவலகம், போஸ்டர் யுத்தம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என நீடித்த இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையேயான யுத்தம் இன்று தமிழ்நாடு சட்டசபையில் பகிரங்கமாகவே வெடித்தது.
அதிமுகவில் யாருக்கு அதிகாரம்? என்கிற அதிகாரப் போட்டி ஓபிஎஸ், இபிஎஸ் இடையே இருந்து வருகிறது. ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரை சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை; ஆகவே தமக்கே கட்சியில் அதிகாரம் உள்ளது என போராடுகிறார். ஆனால் இபிஎஸ் தரப்போ, ஒட்டுமொத்த கட்சியும் பொதுக்குழுவும் எங்கள் வசம் இருக்கிறது. இப்போதைக்கு இடைக்கால பொதுச்செயலாளர்.. இனி நிரந்தர பொதுச்செயலாளர் என ரேஸில் முந்திச் செல்கிறது.

இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றன. பின்னர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை இரு கோஷ்டிகளும் தட்டின. உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில், இபிஎஸ் கூட்டிய ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. ஆனால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் மீது வழக்கு தொடரலாம் என அனுமதித்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பும் அளிக்க இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டி மோதல் தமிழ்நாடு சட்டசபையிலும் இன்று வெடித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக சட்டசபை குழு தலைவர்- எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் இருந்து வருகிறார். துணைத் தலைவராக ஓபிஎஸ் இருந்தார். ஆனால் ஓபிஎஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டார் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சட்டசபையில் இபிஎஸ் அருகேதான் ஓபிஎஸ் பாராமுகமாகவே அமர்ந்திருக்கிறார். அதிமுக எம்.எல்.ஏக்களுடன்தான் ஓபிஎஸ் கோஷ்டி மனோஜ் பாண்டியனும் அமர்ந்திருக்கிறார். முக்கியமான விவாதங்களில் இபிஎஸ், ஓபிஎஸ் இவருமே பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது இன்று இபிஎஸ் பேசினார். அதன்பின்னர் ஓபிஎஸ் பேசினார். அவ்வளவுதான் இபிஎஸ் கொந்தளித்துவிட்டார். அதெப்படி பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படையில் அதிமுகவில் ஒருவரைத்தானே பேச அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார். அப்போது மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முழக்கமிட அதிமுக எம்.எல்.ஏக்கள் அவருடன் மல்லுக்கட்டினர். அப்போது கேபி முனுசாமி குறுக்கிட்டு சமாதானப்படுத்தினார். சபாநாயகர் அப்பாவுவின் விளக்கத்தி ஏற்க மறுத்த
அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
இனிவரும் நாட்களிலு9ம் சட்டசபையிலும் அதிமுக இபிஎஸ், கோஷ்டிகள் யுத்தம் தொடரும் என்பதற்கான முன்னோட்டமே இன்றைய சர்ச்சையும் வெளிநடப்பும் எனவும் கூறப்படுகிறது. நீதிமன்றங்களில் இரு கோஷ்டிகளின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தாலும் சட்டசபையில் அங்கீகாரம் பெறுவதில் இரு அணிகளும் தொடர்ந்து முட்டி மோதவே போகிறது என்பதையே இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications