கொளுத்தி போட்ட சி.வி. சண்முகம்.. திமுகவுக்கு நறுக்கென நாலு கேள்விகள்.. 69% இடஒதுக்கீடு என்னாகும்?

திமுகவை கண்டித்து சிவி சண்முகம் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வெளிவந்த நிலையில், இன்று அதுகுறித்து ஒரு முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என கோர்ட் அறிவித்திருந்த நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடுகள் சுப்ரீம்கோர்ட்டில் செய்யப்பட்டிருந்தன..

இந்த வழக்கில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

 அரசாணை - கணக்கெடுப்பு

அரசாணை - கணக்கெடுப்பு

நீதிபதிகளின் உத்தரவில், "சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.. அப்படி முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது" என்று சொல்லி வன்னியருக்கான இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தனர்.

 அன்புமணி

அன்புமணி

இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக பாமக தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது.. வருத்தம் தருவதாக உள்ளதாகவும் ராமதாஸ், அன்புமணி, உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.. உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும், அதனால், தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மறுபடியும் சட்டமியற்ற வேண்டும் என்றும் பாமக தரப்பில் புது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது...

 சண்முகம் கேள்வி

சண்முகம் கேள்வி

அத்துடன், சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது என்று அன்புமணி ராமதாஸ் மனம் திறந்து பாராட்டியும் உள்ளார்.. ஆனால், அதிமுகவின் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் திமுக அரசை கேள்வி எழுப்பி உள்ளார்.. அதிமுகவின் வன்னியர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்பவர் சிவி சண்முகம்தான்.. நேற்றைய தீர்ப்பு பற்றி அவர் சொன்னதாவது:

கருணாநிதி

கருணாநிதி

"இட ஒதுக்கீடு வழங்குவதில் முன்னோடி மாநிலம் தமிழகமாகும். ஆனால் அதற்கு இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தை உணர்ந்த ஜெயலலிதா இதற்கான சட்டம் இயற்றி, அதை 9வது அட்டவணையில் சேர்ந்து சட்டப் பாதுகாப்பு கொடுத்தார். சுப்ரீம்கோரட்டில் நேற்று வழங்கிய தீர்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது எனத் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. தரவுகள் சரியாக வழங்கப்படவில்லை என்று சொன்னது.

 சாதிவாரி கணக்கெடுப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு

இன்றைய அரசு வழக்கறிஞர்கள் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட 1985ம் ஆண்டு கொடுக்கப்பட்ட அம்பா சங்கர் அறிக்கையின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என பிரிவு உருவாக்கப்பட்டது. 50 சதவீதம் இருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு கொடுக்கப்பட்டது... அதன் பின் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை... இந்த அறிக்கையை ஏன் அரசு மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை? கவனக்குறைவாக விடப்பட்டதா? அல்லது திட்டமிட்டு விடப்பட்டதா? இதை அரசு தெளிபடுத்தவேண்டும்.

 கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒப்புக்கொண்ட நீதிமன்றம் முழுமையான தரவுகள் இல்லை என்று கூறியுள்ளது.. 1931ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புதான் தற்போதுவரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்தப்படவில்லை. அம்பா சங்கர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அரசு சொல்கிறது.

 கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

ஆனால் 2010ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு வந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி, அம்பா சங்கர் அறிக்கையின் பேரில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றார்.. அதன்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவேண்டும் என்றால் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று 21.12.2020ம் தேதி புதிதாக முன்னாள் நீதியரசர் குலசேகரன் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டது.

 இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இதை நடைமுறைப்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வழக்கில் சீனியர் வக்கீலை வைத்து வாதாடவில்லை? அம்பா சங்கர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. குலசேகரன் குழுவை ஏன் முடக்கியது? இன்றைய தீர்ப்பு 69 சதவீதத்தைப் பாதிக்கும். உடனே குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இதை நடைமுறைப்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வழக்கில் சீனியர் வக்கீலை வைத்து வாதாடவில்லை? அம்பா சங்கர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. குலசேக்ரன் குழுவை ஏன் முடக்கியது? இன்றைய தீர்ப்பு 69 சதவீதத்தைப் பாதிக்கும். உடனே குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும்.

 லாட்டரி டிக்கெட்

லாட்டரி டிக்கெட்

தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது அதிமுக அரசுதான்.. ஆன்லைன் ரம்மியையும் தடை செய்தது. இது தொடர்பான வழக்கிலும் தமிழக வழக்கறிஞரை கொண்டும் அரசு வாதாடவில்லை.. இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முடக்கப்பட்ட குலசேகரன் ஆணையத்தை செயல்பட வைத்து அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை தமிழக அரசு மதுரை ஹைகோர்ட்டிலும், சுப்ரீம்கோர்ட்டிலும் சரியாக வாதாடவில்லை.

 கஞ்சா ஒழியுமா?

கஞ்சா ஒழியுமா?

இந்த அரசு, இந்த வருடம் செய்த ஒரே சாதனை பாலியல் கூட்டு வன்முறைதான்.. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை... அன்று பொள்ளாச்சி சம்பவத்தை பூதாகரமாக்கியவர்கள் இன்று வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.. 2.0 என்று பெயர் வைத்துவிட்டால் கஞ்சா ஒழிந்துவிடுமா? பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து விரைவில் விழுப்புரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்றார் சிவி சண்முகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+