"லஞ்ச ஒழிப்புத்துறை கடமையை செய்கிறது.. குற்றமற்றவர்கள் நிரூபிக்கட்டும்" ரெய்டு பற்றி ஓபிஎஸ் பரபர!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலை அருகே உள்ள பெரியார் உருவச் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறுகையில், பெரியார் முதல் ஜெயலலிதா வரை அரசியலில் உடன் பயணித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஐநா சபைக்கு சென்று இந்தியாவின் ஒற்றுமை பற்றியும், மக்களின் வாழ்வியல் பற்றியும் விளக்கமாக பேசியவர்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
அரசியல் காரணங்களுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை பலரும் கூறுவர். ஆனால் அவற்றை புறந்தள்ளிவிட்டு, மூத்த நிர்வாகிகளின் தொண்டை, தியாகத்தை எண்ணி செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஜெயலலிதாவோடு 21 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவன் நான். பல பொதுக்கூட்டங்களில் பலமுறை என்னைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

விஸ்வாசமிக்க தொண்டன்
அதிமுக ஏழை, எளிய மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம். இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வழங்கினாலும் விசுவாசமிக்க தொண்டனாகவே தான் இருந்தேன். அதே நேரத்தில் தலைமையை தொண்டன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் வகுத்த விதி. அதன் வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

ரெய்டு பற்றி ஓபிஎஸ்
இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தான் தன்னை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் லஞ்சம் ஒழிப்புத்துறை தன் கடமையை தான் செய்கிறது என்று தெரிவித்தார்.

பெரியார் புகைப்பட விவகாரம்
முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல் அந்த சிலைக்கு கீழ் பெரியாரின் புகைப்படம் வைக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த ஓபிஎஸ் வந்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி இபிஎஸ்-க்கு தெரிய வந்தது.

அமமுக புகைப்படம்
இதன் பின்னர் இபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து வேகமாக கிளம்ப, அதிமுகவினர் பெரியாரின் புகைப்படத்தையும் எடுத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து அமமுக சார்பாக கொண்டு வரப்பட்ட பெரியாரின் புகைப்படம் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு, பின்னர் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications