Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்வர் ராஜா, மைத்ரேயன்.. டாப் தலைகள் கட்சி மாறுவது கூட.. கடைசிவரை தெரியாத எடப்பாடி.. சொதப்பிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று காலை திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்..

மைத்ரேயனை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து , திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. 2026இல் தமிழகத்தில் திமுக ஆட்சி உறுதி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது.. 2வது இடத்திற்குதான் போட்டி நடக்கும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி அளித்துள்ளார்.

Maithreyan AIADMK DMK

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை 99 எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது என்று திமுகவில் இணைந்த பின் முன்னாள் எம்.பி. உறுப்பினர் மைத்ரேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்

இதையடுத்து அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுகவில் இணைந்த சிறிது நேரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஆனால் இவர் இணைந்த பின்பே நீக்கப்பட்டார்.

அதுவும் கூட இவர் இணையும் வரை எடப்பாடி பழனிசாமிக்கு அது தெரியவில்லை. கட்சியின் டாப் நிர்வாகி ஒருவர் கட்சி மாறுவது கூட எடப்பாடிக்கு தெரியவில்லை. முன்னதாக முன்னாள் எம்பி அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்.

அவர் திமுகவின் இணைந்த போதும் கூட ஸ்டாலினை சந்திக்க சென்ற பின்பே அன்வர் ராஜாவை எடப்பாடி நீக்கினார். நிர்வாகிகள் கட்சி மாறுவது எல்லாம் இயல்புதான். ஆனால் தனது கட்சியின் டாப் நிர்வாகிகள் வேறு கட்சியுடன் பேசுகிறார்கள் என்பதே தெரியாமல் எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார். அதோடு அவர்கள்வேறு கட்சி அலுவலகம் செல்லும் வரை கூட செய்தி தெரியாமல், சென்ற பின்பே நீக்கும் அளவிற்கு எடப்பாடி இருக்கிறார் என்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

எடப்பாடி தடுப்பாரா?

அடுத்த விக்கெட் யார்?

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவில் இருக்கும் இன்னொரு முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகள் பலரும் கட்சி மாறுவது வழக்கம். பலரும் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு, பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை சேர்ந்த புள்ளி அவர் என்று சிலர் கூறும் நிலையில், இன்னொரு தரப்போ அவர் சென்னையில் இருக்கும் புள்ளி என்கிறார்கள். அவர் மீது சில வழக்குகளும் உள்ளன. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருடன் சேர்ந்து இவர் திமுகவில் இணைய உள்ளாராம். இதற்கான இணைப்பு விழா விரைவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள். இவர் மாறும் பட்சத்தில் அதிமுகவிற்கு இருக்க கூடிய அஸ்திவாரம் பெரிய அளவில் காலி ஆகும் என்கிறார்கள். அந்த வகையில், அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் திமுகவில் இணைய ஆயத்தமாகி வருகிறார். அவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரா அல்லது சென்னையைச் சேர்ந்தவரா என்பது குறித்து பல தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவரையாவது எடப்பாடி முன்பே நீக்குவாரா அல்லது இணைய விடாமல் தடுப்பாரா என்று பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+