ஜெ. தோற்ற தேர்தலில் வென்ற ராசிபுரம் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. சுந்தரம் திமுகவில் ஐக்கியம்
சென்னை: ராசிபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தமது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என்றார்.

பி.ஆர். சுந்தரம்
இதேபோல் ராசிபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.ஆர். சுந்தரம் இன்று திமுகவில் இணைந்தார். அதிமுகவின் தொடக்க கால உறுப்பினரான பி.ஆர். சுந்தரம், திமுகவில் இணைந்தது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஜெ. தோற்ற தேர்தலில் வெற்றி
1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை வீசியது. இதனால் ஜெயலலிதாவும் பர்கூர் தொகுதியில் தோற்றுப் போனார். அந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 4 பேர் மட்டுமே வென்றனர். அந்த 4 பேரில் ஒருவர் பி.ஆர். சுந்தரம்.

லோக்சபா அதிமுக எம்.பி
1997-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை நாமக்கல் அதிமுக மாவட்ட செயலாளராக பணியாற்றினார். 2014 லோக்சபா தேர்தலில் வென்று எம்.பி.யானார். ஜெயலலிதா மறைந்த தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்தார் பி.ஆர். சுந்தரம்.

அதிருப்தியால் கட்சி மாறினார்
நாமக்கல் அதிமுக மாவட்ட அவைத் தலைவராக பதவியில் இருந்து வந்தார். அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சீட் கேட்டு பார்த்தார். ஆனால் இவருக்கு சீட் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பி.ஆர். சுந்தரம்
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக!












Click it and Unblock the Notifications