கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா?
சென்னை: இறுதிக்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அதில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சந்தான கிருஷ்ணன்?
முதலமைச்சர் ஸ்டாலின், 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி கொளத்தூர். ஸ்டாலின் சென்னையில் இருக்கும் போதெல்லாம் கொளத்தூர் தொகுதிக்குச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். ஏராளமான திட்டங்களையும் தனது தொகுதியில் செயல்படுத்தி உள்ளார் ஸ்டாலின். வரும் சட்டசபை தேர்தலிலும் அவர் கொளத்தூர் தொகுதியிலேயே மீண்டும் களமிறங்குகிறார்.

கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து
அதிமுக சார்பில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கப்போகும் வலுவான அதிமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணன் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் சந்தான கிருஷ்ணன். இந்நிலையில், முதல் முறையாக அவர் ஸ்டாலினை நேரடியாக எதிர்த்து நிற்க உள்ளார். கடந்த முறை கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட ஆதிராஜாராம், இந்த முறை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சந்தான கிருஷ்ணன்?
சந்தான கிருஷ்ணன் ஐடிஐ படித்தவர். ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டாக பணியாற்றிய்டவர். அதிமுகவில் பகுதி இளைஞர் அணி, திரு.வி.க. நகர் தொகுதி செயலாளர், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில இணை செயலாளர் போன்ற பொறுப்புகளில் இருந்து கட்சி பணியாற்றியவர் சந்தான கிருஷ்ணன்.
மேலும் 75-வது வார்டு கவுன்சிலராகவும் சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கிய பிறகு அக்கட்சியில் செயல்பட்டார் சந்தானகிருஷ்ணன். அமமுகவில் வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
ஸ்டார் தொகுதி வேட்பாளர்
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட சந்தான கிருஷ்ணன், 33 ஆயிரம் வாக்குகள் பெற்று 5ஆம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைந்தார் சந்தான கிருஷ்ணன்.
இந்நிலையில், தற்போது கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சந்தான கிருஷ்ணன். ஸ்டார் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்குகிறார் சந்தான கிருஷ்ணன். மிகப் பலம் வாய்ந்த ஸ்டாலினை எதிர்த்து நிற்கும் சந்தான கிருஷ்ணன் தாக்குப்பிடிப்பாரா என்பது, ரிசல்ட் நாளான மே 4 ஆம் தேதி தெரியவரும்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications