அதிமுகவின் ஜெயக்குமார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் திடீர் சந்திப்பு.. ஏன் தெரியுமா?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாபெரும் கூட்டணியை அமைக்க தயாராகி வருகின்றன.

காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் 4 ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர்.
விரைவில் ‛இந்தியா’ கூட்டணியில் மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு செய்யப்பட உள்ளது. தேசிய அரசியல் களம் இப்படி இருக்கும் சூழலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கி உள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் வரும் நாட்களில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணனும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரும் இன்று சென்னையில் திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு என்பது சென்னை அண்ணா சாலையில் நடந்துள்ளது.
அதாவது பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் இன்று மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் ஜெயக்குமார் மாலை அணிவித்து பெரியாரின் போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
இருவரும் ஒரே நேரத்தில் அங்கு வந்த நிலையில் பரஸ்பரம் கைக்குலுக்கி நலம்விசாரித்து கொண்டனர். பொதுவாக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் கூட பொதுவெளியில் சந்திக்கும்போது பரஸ்பரம் நலம்விசாரிக்கும் பண்பு பல அரசியல் தலைவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தான் இந்த சந்திப்பு என்பது திடீரென்று நடந்துள்ளதும், நாகரீகம் கருதி இருவரும் பேசிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications