’கட்டபஞ்சாயத்து ராஜா' ஓபிஎஸ் பின்னணியில் திமுக! எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்! விடாத ஜெயக்குமார்
சென்னை : அதிமுக சார்பில் ஓ.பி.எஸ்-ஐ துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அப்போது தான் அவர் மாண்புமிகு சபாநாயகர் இல்லையென்றால் மான்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தொழிற்சங்க அமைப்பான அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

ஜெயக்குமார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,"போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை. இந்த அரசு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல உள்ளது. நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை ஆனால் அந்த நிலைக்கு தள்ள வேண்டாம்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது. அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சபாநாயகர் கூறுவது தேவையற்ற பேச்சு. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு அதில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை

சபாநாயகர் அப்பாவு
நாங்கள் ஓபிஎஸ் போல பந்திக்கு முந்திக்கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் உடன் 80%தொண்டர்கள் இல்லை வெறும் 80 தொண்டர்கள் தான் உள்ளனர் என விமர்சனம் செய்தார். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். எனவே அதிமுக சார்பில் ops யை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்

திமுக
அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் இல்லையென்றால் மான்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார். அதிமுக ஆட்சியின் போது சிறப்பாக செயல்பட்டு வந்த காவல்துறை இன்று திமுகவின் ஏவல்துறையாக மட்டுமே உள்ளது. திமுக ஓ.பன்னீர்செல்வத்தை முடுக்கிவிட்டுள்ளார்கள். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் திமுக என்ன சொல்கிறதோ அதனைச் செய்வார்." என்றார்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications