நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.. மாநிலங்களை நம்புங்க! மத்திய அரசுக்கு ஸ்டாலின் டிமாண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுக்க இந்த போரட்டம் விரிவடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வே கூடாது என்ற கோரிக்கையுடன் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Mk Stalin urges Union Govt NEET Protest It is time to trust and abolish Exam

மு.க ஸ்டாலின் ட்வீட்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- நீட்டை அறிமுகம் செய்த போது மத்திய அரசு என்ன சொன்னது என்றால், "சுமையை குறைக்கும். கல்வியில் வணிகமயமாக்கலை நீக்குவதற்கான நடவடிக்கையாக இருக்கும். தரத்தை மேம்படுத்துவதற்கு" நீட்டை கொண்டு வருவதாக அப்போது 3 வாக்குறுதியாக சொனார்கள். ஆனால் இப்போது இந்த மூன்று வாக்குறுதியுமே தோல்வியடைந்து இருக்கிறது. நீட் தோல்வியடைந்து இருக்கிறது. மேலும் இது மாணவர்களை பள்ளியின் கற்றல் மையத்தில் இருந்து பயிற்சி மையத்திற்கு மாற்றியிருக்கிறது இந்த நீட் தேர்வு.

மேலும் தற்போது மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் அதை உணர்த்தி இருக்கிறது. எனவே நீட் தேர்வு குறித்து கட்டமைப்பு சார்ந்ததாக இருப்பது போன்ற நடைமுறை ரீதியான நிகழ்வு இல்லை. எனவே மாணவர்களின் போராட்டத்தை மத்திய அரசுக்கான ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு குளறுபடி

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர்.

அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதில் காயம் அடைந்த போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 70-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரதமர் இல்லம் முன்பாக காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் குதித்தது. நாடாளுமன்றத்திலும் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன

பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 4-வது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து குவிந்து வருகிறார்கள். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கூடுதலாக போலீஸ், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இளைஞர்களின் போராட்டம் நாடு முழுக்க தீவிரம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் நீட் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் சேராமல் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளிலும் நீட் தேர்வுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+