முதல்வர் விஜய் எடுத்த முடிவு.. மனமகிழ்மன்றம், ஹோட்டல் கிளப் உரிமையாளர்கள் பரிதவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் மதுபானக்கடைகளை தாண்டி, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எப்.எல்.-2 உரிமம் பெற்ற தனியார் மதுபான பார்களும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த தனியார் பார்களின் சிறப்பு உரிமக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் உயர்த்தியுள்ளது. அதன்படி FL 2 பார்களுக்கான உரிமம் கட்டணம் 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் கிளப் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் கீழ் சுமார் 4000க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவையில்லாமல் ஆயிரக்கணக்கான மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எப்.எல்.-2 உரிமம் பெற்ற தனியார் மதுபான பார்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இந்த தனியார் பார்களின் சிறப்பு உரிமக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அதிரடியாக இரண்டு மடங்கு உயர்த்தியது.

Permission for new bars

இதற்கான தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ல் திருத்தம் செய்யபட்டு, கடந்த ஜூன் 25-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து, புதிய கட்டண திருத்தம் குறித்த அரசிதழிலும் வெளியிடப்பட்டது. உயர்த்தப்பட்ட கட்டண முறை 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக கருதப்படும் என்றும் அரசு அறிவித்தது.

தமிழகஅரசின் அறிவிப்பின் படி, சென்னை மாநகரத்தில் உள்ள மனமகிழ் மன்ற பார்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய சிறப்பு உரிமக் கட்டணம் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பிற பகுதிகளுக்கான சிறப்பு உரிமக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் - விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000, உரிமக் கட்டணம் ரூ.30,000, சிறப்பு உரிமக் கட்டணம் ரூ.30,00,000.
10 லட்சத்துக்கும் அதிக மக்கள் தொகையுள்ள பிற மாநகராட்சிகள் - விண்ணப்பக் கட்டணம் ரு.10,000, உரிமக் கட்டணம் ரூ.30,000, சிறப்பு உரிமக் கட்டணம் ரூ.25,00,000.
10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையுள்ள மாநகராட்சிகள் - விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000, உரிமக் கட்டணம் ரூ.30,000, சிறப்பு உரிமக் கட்டணம் ரூ.20,00,000.
நகராட்சிகள் - விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000, உரிமக் கட்டணம் ரூ.30,000, சிறப்பு உரிமக் கட்டணம் ரூ.15,00,000.
பிற அனைத்து பகுதிகள் - விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000, உரிமக் கட்டணம் ரூ.30,000, சிறப்பு உரிமக் கட்டணம் ரூ.10,00,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் கிளப் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தமிழகத்தில் எப்எல் 2 பாடுகளுக்கும் எஃப் எல் 3 பார்களுக்கும் ஒரே அளவிலான நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 15 லட்சம் ரூபாயாக இருந்த எஃப்எல் டு பார்களுக்கான உரிமம் கட்டணத்தை, தற்போதைய தமிழக அரசு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி விட்டதாகவும் இது அனைத்து பார் உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே 30 லட்சம் ரூபாய் என்ற கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் வலியுறுத்தியுள்ளார். புதிய பார்களுக்கான அனுமதியை விரைவாக வழங்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், ஒற்றை சாலர முறையில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+