பள்ளிவசாசலில் ஒலித்த பாங்கு.. பேட்டியை அப்படியே நிறுத்தி சட்டனெ ஜெயக்குமார் செய்த செயல்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஒலித்தது. இதனால், பேட்டியை அப்படியே நிறுத்திவிட்டு, ஒரு சில நிமிடங்கள் அமைதியாக தொழுகை செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் ஆளும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு இருந்தார். ஜெயக்குமார் கூறுகையில், "திமுகவை போல இல்லாமல் அதிமுகவினர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். இதனால் ஆட்சியில் இல்லை என்றாலும் சொந்த செலவில் நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

பேட்டியை நிறுத்திவிட்டு தொழுகை: 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி, 2026இல் ஆளப்போகிற கட்சி நாங்கள் தான். திமுக மோசமான கட்சி" என்று சகட்டுமேனிக்கு விமர்சித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஒலித்தது. இதனால், பேட்டியை உடனே நிறுத்திய ஜெயக்குமார்.. அருகில் இருந்தவர்களிடம் இப்படித்தானே கும்பிட வேண்டும் என்று கூறி இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து அமைதியாக தொழுகை செய்தார்.
சில நிமிடங்கள் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அப்படியே நின்ற ஜெயக்குமார்.. பங்கு ஒலித்தது நின்ற பிறகு மீண்டும் தனது பேட்டியை தொடங்கினார். பாங்கு ஒலித்ததும் ஜெயக்குமார் தனது பேட்டியை நிறுத்திவிட்டு அப்படியே அமைதியாக நின்றது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டி அளித்த ஜெயக்குமார் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார்.
இரண்டு சதவிகித வாக்குகள்: அப்போது ஜெயக்குமாரிடம் புதுச்சேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பாஜக பேனர்கள் குறித்த கேள்வி எழுப்பப்படது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "புதுச்சேரி அதிமுக பிரிவு சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் தலைவர்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
திமுகவுக்கும் பாஜகவும் இடையே மறைமுக கூட்டு உள்ளது. நாங்கள் அடிப்பது போல அடிக்கிறோம். நீங்கள் அழுவது போல அழுங்கள் என சொல்லி வைத்துவிட்டுச் செய்கிறார்கள். மோடி தமிழகம் வருவதால் ஒன்னும் நடக்காது. அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு சதவிகித வாக்குகள் அதிகம் கிடைக்கும். பாஜக சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்குத் தாங்களே பில்டப் தருவார்கள். ஆனால், களத்தில் எந்தவொரு பலனும் இல்லை" என்றார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications