அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி!
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி டாக்டர் வேணுகோபால், கட்சித் தலைமையின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுகவில் இருந்து விலகி உள்ளார். அவர் அதிமுக சார்பில் தொடர்ந்து இரண்டு முறை (2009 மற்றும் 2014) திருவள்ளூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017இல் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக செயல்பட்ட வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியல் சமூக மக்களிடம் அதிமுக நம்பிக்கை இழந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி மீது குற்றஞ்சாட்டியும் வேணுகோபால் விலகியுள்ளார். அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை என வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் வெளியிட்டுள்ள கடிதத்தில், "எம்.ஜி.ஆர் மக்களை கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்கரும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும் கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். அவரது அரசியல் வாரிசாக தனிப்பெறும் மக்கள் சக்தியாக ஜெயலலிதா அவர்களும், எம்ஜிஆர் பாதையில் கழகத்தை வலுப்படுத்த, பிரிந்து சென்ற தலைவர்களை எல்காம் இயக்கத்தில் இணைத்து கழகத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடும், வலிமையோடும் வழிநடத்தினார்.
அத்தகைய மாபெரும் இயக்கம் அம்மா தலைமையில் இயங்கிய கட்டுக்கோப்பான இயக்கம் நம்முடைய அஇஅதிமுக இன்றைய தினம் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பெற்றோரை இழந்து வாடும் அளாதையான குழந்தை யாரிடம் செல்வது என்று வழிதெரியாமல் தத்தளிப்பது போல் இன்றைய தினம் நம்முடைய கழகத்தில் தொண்டர்களின் நிலை உள்ளது.
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் ஒன்றரை கோடி தொண்டர்களாக கட்டமைக்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாராகுமன்றத்தில் இந்தியாலிலேயே மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக வலிமை பெற்றது. இப்படிப்பட்ட வலுவான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம. தற்போது இயக்கம் சந்தித்து வரும் தொடர் பிள்ளடைவுகளுக்கு பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணிகள் உள்ளன.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் அஇஅதிமுக அசைக்க முடியாத பலமாகப் பட்டியல் இன ஆதரவு இருந்தது. அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஒரு வலுவான அனைவருக்குமான தோற்றம் குறைய தொடங்கியதால், அந்த ஆதரவு தளம் படிப்படியாகச் சரிந்தது. தற்போதைய அரசியல் சூழலில், பட்டியலின மக்கள் தங்களை அஇஅதிமுகவில் இருந்து முழுமையாக துண்டித்து கொண்டதோ, அல்லது புறக்களிப்பதோ கழகத்தில் தேர்தல் தோல்விகளுக்கு ஒரு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அணைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் சென்ற கழகம் "சமூக கூட்டமைப்பு தற்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி எழும் தோற்றம், மற்ற சமூகத்தவரிடையே ஒரு இடைவெளியை உருவாக்கி உள்ளது. மீண்டும் கழகம் பழைய பலத்தை பெறவேண்டும் என்றால் அனைத்து கழகத்தினரையும் உள்ளடக்கி ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையையும் நம்பிக்கையும் மீண்டும் கட்டி எழுப்பவேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.
தமிழ் மக்கள் நலனையும், கழகத் தொண்டர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பல்வேறு முரண்பட்ட கருத்துகளோடு செயல்பட்டு வரும் நம்முடைய கழகத்தை வலுப்படுத்த அனைவரும் விட்டுக்கொடுத்து ஓரணியில் திரண்டு அம்மா பொன்மொழியாகக் கூறிய அஇஅதிமுக என்ற பேரியக்கம் என்னுடைய மறைவிற்கு பிறகும் "நூற்தாண்டுகள் வாழும்!"என்பதை நினைவில் கொண்டு அம்மா அவர்களின் கனவை நினைவாக்க அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தை வலிமைப்படுத்தி கழகத் தொண்டர்களின் நன்மதிப்பை பெற்று அனைவரும் ஒருங்கினைந்துன்மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்பதற்க்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதா இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட மக்களவை, மாநிலங்களவை அஇஅதிமு.க பாராளுமன்ற குழுத் தலைவராகவும் இந்திய பாராளுமன்ற அரசு ஊர்ச்சித் துறை நிலைக் குழு தலைவராகவும், கழகத்தின் மருந்துவ அணிச் செய்யாளராகவும் கழகத்தில் ஆட்சிமன்றக் குழ உறுப்பினராகவும், பல்வேறு பொறுப்புகளை வகித்ததினாலும் கடந்த 2017 ஆம் ஆண்டு அம்மா மறைவிற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அணிகளாக பிளவுபடும் சூழ்ல்நிலையிலும், திறம்பட செயல்பட்டு ஓரணியாக வழி நடத்தி சென்றவன் என்ற காரணத்தினாலும் இன்றைய சூழ்ல்நிலையில் இந்த கேளிக்கையை கழகத் தொண்டர்கள் அனைவரின் சார்பாக முன்வைத்து மீண்டும் கழகம் எழுச்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மிக்க கனத்த இதயத்தோடும் ஆழ்ந்த மன வருத்தத்தோடும் இன்று முதல் என்னை கழகத்திலிருந்து விடுவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications