சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொதுச்செயலாளராகிட்டீங்களா.. நெக்ஸ்ட் ஜெயில்தான்.. அதிமுக வரலாறு அப்படி.. போட்டுத் தாக்கிய ராஜீவ்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளாராக தேர்ந்தெடுக்கபடுபவர்கள் சிறைக்கு செல்வது வரலாறு என திமுகவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்னும் 4 மாதங்களில் அவர் தேர்தலையும் சந்திக்கவுள்ளார்.

'சின்னம்மா’ தானே பொதுச்செயலாளரு.. சீல் வைக்குறேன் பாருங்க! பூட்டோடு அதிமுக அலுவலகம் வந்த லோக்கல் கை! 'சின்னம்மா’ தானே பொதுச்செயலாளரு.. சீல் வைக்குறேன் பாருங்க! பூட்டோடு அதிமுக அலுவலகம் வந்த லோக்கல் கை!

அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலாலிதா, சசிகலா போல அவரும் சிறை செல்வார் என சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், திமுகவினரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சென்டிமென்ட் காரணமாகத்தான் ஓபிஎஸ் கூட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியிலேலே இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளாராக தேர்ந்தெடுக்கபடுபவர்கள் சிறைக்கு செல்வது வரலாறு என தி.மு.க தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளரான ராஜீவ்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி திமுக

ராஜீவ்காந்தி திமுக

இதுகுறித்த பதிவில்," என்னை பழைய பழனிச்சாமினா நினைச்சிங்க!! இல்லைங்க அய்யா!! பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொதுச்செயலாளர் சசிகலா போன்று.. ஊழல் வழக்கில் சிறைக்கு போக இருக்கும் புதிய பொதுச்செயலாளர் பழனிச்சாமி என்றுதான் நினைக்கிறோம்!! உங்க கட்சி பொதுச்செயலாளர் பதவி வரலாறு அப்படி!" என பதிவிட்டுள்ளார்.

தகவல் உண்மையா?

தகவல் உண்மையா?

இந்த பதிவினை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், இது உண்மையா என பலரும் கேட்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு பல்வேறு ஊழல் வழக்குகள் சிறை தண்டனை, பதவி இழப்பு என பல்வேறு சிக்கல்களை சந்தித்தார் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டுமென முன்னாள் துணை சபாநாயகரான தம்பிதுரை கடிதம் எழுதிய நிலையில், அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிளம்பும்

கிளம்பும்


அதன் பிறகு ஊழல் வழக்கில் அவரும் சிறை சென்ற நிலையில், அதிமுக பொதுச்செயலாலர் என்ற பதவியே ஒழிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஊழல் வழக்கில் சிறை செல்வார் என குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ராஜீவ்காந்தி. அது உண்மையாகுமா? யூகமாகவே போகுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

English summary
While Edappadi Palaniswami has been elected as the Interim General Secretary of AIADMK in the general body meeting held yesterday, DMK's Rajiv Gandhi posted on Twitter that those who are elected as AIADMK General Secretary go to jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X