அண்ணாமலை ஜெயிக்கவே கூடாது.. அதிமுக கையில் எடுத்த மிகப்பெரிய அஸ்திரம்.. இவ்வளவு பிளானிங்கா?
சென்னை: கோவையில் திமுகவிற்கு சாதகமான சூழல் உள்ளது. கோவையில் திமுக vs பாஜக என்று மோதல் வரலாம். இதன் காரணமாக அதிமுக மூன்றாம் இடத்திற்கு செல்லலாம். ஸ்டாலின் இதனால்தான் அங்கே திமுக வேட்பாளரை களமிறக்கி உள்ளார், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
கோவை லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்.
2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சரி இந்த தேர்தலில் அங்கே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கோவை லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கொங்கு மண்டலத்தில் நிலவரம் வேறு. அங்கு கொங்கு வேளாள கவுண்டர்களுக்கே மற்ற ஜாதியினர் வாக்களிக்க மாட்டார்கள். அங்கே 2019ல் சிபிஆர் தோல்வி அடைய இது ஒரு காரணம். கொங்கு வேளாள கவுண்டர்கள் வாக்குகளை மற்றவர்களின் வாக்குகளையும் பெற திமுக காய் நகர்த்தி வருகிறது. அந்த பிரிவினர் பலர் பிஸ்னஸ்மேன்கள்.
அதனால் அவர்கள் ஆளும் கட்சியை ஆதரிப்பார்கள். அப்படி இருக்க திமுகவிற்கு அந்த பகுதியில் ஒரு பிரிவு வாக்களிக்கும். திமுகவிற்கு இது சாதகம். இதனால் கோவையில் மோதல் திமுக vs பாஜக என்று மோதல் வரலாம் இதன் காரணமாக அதிமுக மூன்றாம் இடத்திற்கு செல்லலாம். ஸ்டாலின் இதனால்தான் அங்கே திமுக வேட்பாளரை களமிறக்கி உள்ளார்.
அங்கே பாஜக பெரிய ஆளை நிற்க வைக்கும் என்று ஸ்டாலினுக்கு தகவல் சென்றுள்ளது. அதனால்தான் அங்கே சிபிஎம்மிற்கு பதிலாக திமுக இறங்கி உள்ளது. அங்கே அதிமுக நாயுடுவை களமிறக்கி உள்ளனர். கொங்கு வேளாளர் வாக்குகள் பிரியும் என்பதால் நாயுடு வாக்குகளை பெற வேண்டும். நாயுடு ஓட்டுகள் பாஜகவிற்கு செல்ல கூடாது என்பதால் அங்கே அதிமுக இப்படி செய்துள்ளது.
அண்ணாமலை வெல்லவே கூடாது என்பதால் அதிமுக நாயுடு வேட்பாளரை களமிறக்கி உள்ளது. நாயுடு வேட்பாளர்களில் பலர் மோடி ஆதரவு என்பதால் அதை தடுக்க இப்படி செய்கின்றனர். அண்ணாமலை வந்தால் கொங்கில் இவர்கள் அரசியல் முடிந்துவிடும் என்பதால் அதிமுக இப்படி செய்கிறது.
திமுகவிற்கு கொங்கு வேளாளர் + நான் கொங்கு வேளாளர் + சிறுபான்மையினர் + கேரளாவில் இருந்து வந்தவர்கள் போன்ற குழுவினர் வாக்களிப்பார்கள். இது திமுகவிற்கு சாதகம். அண்ணாமலைக்கு கொங்கு வேளாளர் + மோடி வர வேண்டும் என்று மற்ற ஜாதியினர் ஆகியோர் வாக்களிப்பார்கள், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications